அடுத்தடுத்த ப்ரமோக்கள்.. மிரட்டும் நானே வருவேன் பிரமோஷன்கள்.. ரசிகர்கள் உற்சாகம்!
சென்னை : நடிகர் தனுஷ் -செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் நானே வருவேன்.
செப்டம்பர் 30ம் தேதி மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படம் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் அந்தப் படத்துடன் தனுஷின் நானே வருவேன் படம் ரிலீசாக உள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷின் அடுத்தடுத்தப் படங்கள் ரிலீசாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ள நிலையில், அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகி தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது திருச்சிற்றம்பலம் படம். இந்தப் படம் வெளியாகி 13 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.

திருச்சிற்றம்பலம் படம்
படத்தின் இயல்பான மற்றும் எளிமையான கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து. ஆண் -பெண் இடையிலான நட்பை, புரிதலை, காதலை இந்தப் படம் சிறப்பாக எடுத்துக் காட்டியது. படத்தின் இயக்குநர் மித்ரன் ஜவஹர், ஏற்கனவே தனுஷுடன் இணைந்து யாரடி நீ மோகினி, குட்டி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த நிலையில் இந்தக் கூட்டணி திருச்சிற்றம்பலம் படத்தையும் வெற்றிப் படமாக்கியுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படத்தை தொடர்ந்து தனுஷின் நானே வருவேன், வாத்தி படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. இதில் நாளை மறுநாள் திரையரங்குகளில் தனுஷின் நானே வருவேன் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கவுள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

செல்வராகவன் நடிப்பு
இந்தப் படத்தை இயக்கியுள்ளதுடன் முக்கியமான கேரக்டரிலும் செல்வராகவன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் ரோல்களில் தனுஷ் நடித்துள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகிறது. அடர்த்தியான காட்டுப்பகுதிகளில் அதிகமாக இந்த ப்ரமோக்களின் காட்சிகள் காணப்படுகின்றன.

சிறப்பான ப்ரமோக்கள்
இந்த ப்ரமோவின் பின்புலத்தில் பளிங்கினால் ஒரு மாளிகை என்ற பழைய பாடல் ஒலிக்க தனுஷ் இருட்டு காட்டுப்பகுதியில் யாரையோ தேடியபடி டார்ச் லைட் சகிதம் வருவதாக காணப்படுகிறது. பார்ப்பவர்கள் பரிதவிக்கும் வகையில் இந்தக் காட்சி காணப்படுகிறது. இந்தப் படத்திற்கு ப்ரமோஷனே இல்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது படக்குழு அடுத்தடுத்த ப்ரமோஷன்களை வெளியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











