இரட்டை வேடத்தில் கலக்கும் தனுஷ்... கெட்டப் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு
சென்னை : நடிகர் தனுஷ் தன்னுடைய அண்ணனின் டைரக்ஷனில் மீண்டும் இணைந்துள்ள படம் நானே வருவேன்.
இந்தப் படத்தின் சூட்டிங் இடையில் சிறிது தாமதப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தனுஷ் இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்,

நானே வருவேன் படம்
நடிகர் தனுஷ் மாறன், திருச்சிற்றம்பலம் படங்களுக்கு பின்பு தற்போது நானே வருவேன் படத்தில் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த மாதம் அக்டோபரில் துவங்கி நடைபெற்று வந்தது.

வாத்தி படப்பிடிப்பில் தனுஷ்
இதனிடையே இடையில் தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள வாத்தி படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சென்று விட்டார் தனுஷ். வெங்கி அட்லூரி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகவுள்ளது. தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள முதல் நேரடி தெலுங்குப்படம் இது. இதில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் சம்யுக்தா மேனன்.

பாடல்கள் சூட்டிங் நிறைவு
ஐதராபாத்தில் இதன் சூட்டிங் நடைபெற்ற நிலையில், நானே வருவேன் படத்தின் நிலை குறித்து அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அவர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் படத்தின் அனைத்து பாடல்களும் முடிவடைந்துள்ளதாக செல்வராகவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வராகவன் அறிவித்திருந்தார்.

மீண்டும் படப்பிடிப்பு
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் துவங்கியுள்ளது. இதில் தனுஷ் கலந்து கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் இந்துஜா ரவிச்சந்தர். சைக்காலஜிக்கல் த்ரில்லராக இந்தப் படம் உருவாகி வருகிறது.

இரட்டை வேடங்களில் தனுஷ்
தனுஷ் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துவரும் நிலையில், தற்போது அவரது இரட்டை வேடங்களின் லுக் வெளியாகியுள்ளது. இரண்டு கெட்டப்புகளிலும் வித்தியாசமான தனுஷை பார்க்க முடிகிறது. ஆனால் ஆக்ரோஷத்திற்கு பஞ்சமில்லாத கண்களை இரண்டிலும் பார்க்க முடிகிறது.

அடுத்தடுத்த ஓடிடி ரிலீஸ்
முன்னதாக ஜகமே தந்திரம், அட்ராங்கி ரே உள்ளிட்ட தனுஷின் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில் அடுத்ததாக அவரது மாறன் மற்றும் தொடர்ந்து அவர் நடித்துள்ள ஹாலிவுட் படம் இரண்டுமே ஓடிடியில் வெளியாக உள்ளது. இதையடுத்து திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களாவது நேரடியாக திரையரங்குகளில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











