Naane Varuven Twitter Review: த்ரில்லர் படமா? பேய் படமா? தனுஷின் நானே வருவேன் எப்படி இருக்கு?

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள நானே வருவேன் படம் வெளியாகி தியேட்டர்களில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

பிரபு, கதிர் என டபுள் ரோலில் இந்த படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். ஹாலிவுட் பேய் படங்கள் போல செம த்ரில்லாங்க செல்வராகவன் இயக்கி உள்ளார் இந்த படத்தை என நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

காஞ்சுரிங் தமிழ் வெர்ஷன் என்றும் ட்வீட்கள் பறக்கின்றன. முதல் பாதி முடிந்த நிலையில், படத்துக்கு ரசிகர்கள் என்ன ரேட்டிங் கொடுத்துருக்காங்கன்னு இங்கே பார்ப்போம்..

தனுஷ் ட்வீட்

தனுஷ் ட்வீட்

Naane varuven .. FROM TODAY என மூன்று ஹார்டீன்களை போட்டு நடிகர் தனுஷ் தற்போது ட்வீட் போட்டுள்ளார். படத்தை பார்த்த ரசிகர்கள், தலைவா வேறலெவல்ல மிரட்டிட்டீங்க என பாராட்டி வருகின்றனர். பிரபு மற்றும் கதிர் என இரு கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி இருக்கிறார் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் கதையே தனுஷ் எழுதியது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன் மிரட்டல்

செல்வராகவன் மிரட்டல்

மயக்கம் என்ன படத்திற்கு பிறகு மீண்டும் தனது தம்பி தனுஷ் உடன் இணைந்து செல்வராகவன உருவாக்கியுள்ள நானே வருவேன் படத்தில் ஆரம்பத்தில் வேட்டைக்காரனாக வந்து மிரட்டி உள்ளார் செல்வராகவன் என ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் என்றும் ஃபயர் எமோஜிக்களை பதிவிட்டு வருகின்றனர். செல்வராகவன் நடித்த காட்சியின் சின்ன வீடியோ க்ளிப்ஸையும் ஷேர் செய்து வருகின்றனர்.

யுவன் பிஜிஎம் வெறித்தனம்

யுவன் பிஜிஎம் வெறித்தனம்

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்துக்கு தேவையான ஹாரர் விஷயங்களை அழகாக கொடுத்துள்ளது என பிரசாந்த் ரங்கசாமி ட்வீட் போட்டுள்ளார். கோடு வேர்ட் அக்செப்டட் என சிம்பு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். படத்தில் அது மட்டும் தான் நல்லா இருக்கா என்றும் கேட்டு வருகின்றனர்.

இடைவேளை தெறிக்குது

இடைவேளை தெறிக்குது

கதிரின் என்ட்ரி வரப் போகிறது என்கிற அறிவிப்புடன் முடியும் இடைவேளை தெறிக்குது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். த்ரில்லர் படம் இல்லை என்றும் இது ஹாரர் படம் என்றும் இதுவரை படம் பார்த்த ரசிகர்கள் கமெண்ட் போட்டுள்ளனர். திருச்சிற்றம்பலம் படத்துக்கு பிறகு இன்னொரு வெற்றி தனுசுக்கு என ரசிகர்கள் உறுதியாக உள்ளனர்.

நெகட்டிவ் விமர்சனங்களும் குவியுது

நெகட்டிவ் விமர்சனங்களும் குவியுது

ஹாரர் படமாக உருவாகி உள்ள தனுஷின் நானே வருவேன் படம் ரொம்பவே ஸ்லோவா போகுது என்றும் வாய்ஸ் ஓவர்கள் இரிடேட் செய்வதாகவும் இந்த நெட்டிசன் வெறும் 1.5 ரேட்டிங் மட்டும் தான் இந்த படத்துக்கு எனக் கொடுத்துள்ளார். தனுஷ், சிம்பு ரசிகர்களிடையே சண்டையும் வெடித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X