தனுஷ் 39.. குற்றாலத்தில் படப்பிடிப்பு தொடங்கியது!
தனுஷ் 39 படப்பிடிப்பு குற்றாலத்தில் தொடங்கியுள்ளது.
Recommended Video

சென்னை : சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் தொடங்கியுள்ளது.
அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் வெற்றியை அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தனுஷை வைத்து இரண்டு படங்கள் தயாரிக்கிறார். ஒரு படத்தை கொடி படத்தின் இயக்குனர் துரைசெந்தில்குமாரும், மற்றொரு படத்தை ராட்சசன் பட இயக்குனர் ராம்குமாரும் இயக்குகின்றனர்.

இதில் துரைசெந்தில்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் குற்றலாத்தில் நேற்று துவங்கியுள்ளது. இப்படத்திற்கு "தயாரிப்பு எண் 34" என தற்காலிக தலைப்பு வைத்துள்ளனர். தனுஷ் மற்றும் சினேகா நடிக்கும் முதல் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற இருக்கிறது.
தனுஷுடன் இரண்டாவது முறையாக இணைவது குறித்து இயக்குனர் துரைசெந்தில்குமார் கூறியதாவது, "கொடி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் தனுஷ் உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சத்யஜோதி பிலிம்ஸ் போன்ற ஒரு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை நான் பெற்றிருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மிகச்சிறந்த படத்தை வழங்கும் பொறுப்பு என் தோள்களில் உள்ளது என்பதை நான் உணர்கிறேன், அதை நிறைவேற்ற கடுமையாக உழைப்பேன்" என்றார்.
இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைக்கிறார்கள். தனுஷ் - ராம்குமார் இணையும் புதிய படத்தின் படிப்பிடிப்பு இந்த படத்திற்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











