2025ஐ வழியனுப்பி 2026ஐ வரவேற்ற தனுஷ்.. எப்படினு பாருங்க.. மனுஷன் வேற லெவல்.. சூப்பர் பாஸ்!
சென்னை: 2025ஆம் ஆண்டு முடிந்து 2026ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. புத்தாண்டை மக்கள் வழக்கம் போல் உற்சாகத்தோடு வரவேற்றார்கள். கடந்த வருடம் போல் இல்லாமல் இந்த வருடமாவது தாங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்று பலரும் வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் தனுஷின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
உலகம் முழுவதும் 2025ஆம் ஆண்டு முடிந்து 2026ஆம் ஆண்டு பிறந்திருக்கிறது. புத்தாண்டு என்றாலே டிசம்பர் 31ஆம் தேதி இரவு உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் கூடி உற்சாகத்தோடு புது ஆண்டை வரவேற்பார்கள். அப்படித்தான் இந்த முறையும் நடந்திருக்கிறது. கடந்த வருடத்தில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் எல்லாம் இந்த வருடத்தில் நடக்கக்கூடாது; தாங்கள் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் என்று இயற்கையிடமும், கடவுளிடமும் வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.
களைகட்டிய பார்ட்டிகள்: புத்தாண்டு என்றாலே பார்ட்டிகளுக்கு குறைவு இருக்காது. பப்கள், ரெசார்ட்டுகள் என அத்தனையும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். அப்படித்தான் இந்த வருட தொடக்கமும் சென்னை ஈசிஆர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ரெசார்ட்டுகள், பப்கள் ஆகியவைகள் மக்களில் வைபால் அதிர்ந்தது. ஒவ்வொருவரும் அருகில் இருந்தவர்களுக்கு தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்கள். சாமானியர்கள் மட்டும்ன்றி செலிபிரிட்டிகளும் தங்களது வாழ்த்துகளை தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

தனுஷின் வாழ்த்து: அந்தவகையில் நடிகரும், இயக்குநருமான தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "2025ஆம் ஆண்டை மறக்க முடியாததாக மாற்றியதற்கு நன்றி. மூன்று திரைப்படங்கள் மூன்று மொழிகளில் வந்தன. அவை ஒவ்வொன்றும் வெற்றி பெற்றது ஆசீர்வாதம். இது அனைத்தையும் உங்கள் அன்பும், ஆதரவும்தான் சாத்தியமாக்கியது.
மூன்று வேறு மொழிகளில் மூன்று படங்கள்... அவற்றில் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வெற்றி பெற்றதைக் காண முடிந்தது என் வாழ்நாளில் என்றும் நினைவுகூரும் ஒரு ஆசீர்வாதம். இது அனைத்தும் உங்கள் அன்பும் ஆதரவும்தான் சாத்தியமாக்கியது.2026ஆம் ஆண்டை வரவேற்கும் இந்த நேரத்தில் உங்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டிக்கொள்கிறேன். ரசிகர்கள்தான் எனது தூண்கள். எப்போதும் எல்லையற்ற ஆதரவையும், அன்பையும் கொடுப்பத்ற்கு நன்றி. புத்தாண்டு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தனுஷின் 2025 படங்கள்: முன்னதாக தனுஷுக்கு இந்த வருடம் தமிழில் இட்லி கடை, தெலுங்கில் குபேரா, ஹிந்தியில் தேரே இஷ்க் மெய்ன் ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. இம்மூன்று படங்களில் இட்லி கடை தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் குபேரா, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய படங்கள் இங்கு சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் போர்த்தோழில் இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











