தனுஷின் அடுத்த படத்தில் இணையும் ஏஆர் ரஹ்மான்… பியார் பிரேமா காதல் இயக்குநருடன் மாஸ் கூட்டணி?
சென்னை: கோலிவுட் முன்னணி நடிகரான தனுஷ், வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' வரும் 29ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், வாத்தி, கேப்டன் மில்லர் படங்களுக்குப் பிறகு தனுஷ் யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹிட் கொடுக்குமா நானே வருவேன்?
தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் நூறு கோடி வசூலை கடந்தது. திரையரங்குகளைத் தொடர்ந்து சன் நெக்ஸ்ட்டிலும் வெளியான இந்தப் படத்திற்கு ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' 29ம் தேதி வெளியாகிறது. தனுஷ் இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படம், பொன்னியின் செல்வனுடன் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதனால், பெரியளவில் ஹிட் கொடுக்குமா என ரசிகர்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.

தனுஷின் அடுத்த பட அப்டேட்
நானே வருவேன் வெளியாகவுள்ள நிலையில், 'வாத்தி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷ் பிஸியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனை முடித்துவிட்டு உடனடியாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடிக்கிறார் தனுஷ். இப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே பூஜையுடன் தொடங்கிவிட்டது. இந்நிலையில், வாத்தி, கேப்டன் மில்லர் படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை இளன் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹரிஷ் கல்யான் நடித்த பியார் பிரேமா காதல் படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இளன்.

ஹரிஷ் கல்யாணுக்குப் பதில் தனுஷ்?
பியார் பிரேமா காதல் படத்தை முடித்துவிட்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 'ஸ்டார்' என்ற படத்தைத் தொடங்கினார் இளன். ஆனால், இந்தப் படம் பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே முடிவடையாமல் நிற்கிறது. ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகி நல்ல ரிச் ஆகியிருந்தது. இந்நிலையில், இந்தப் படத்தில் தனுஷ் நடிப்பதாக இருந்தால் சில முன்னணி நிறுவனங்கள் தயாரிக்க ரெடி என க்ரீன் சிக்னல் கொடுத்தன. ஆனாலும், இதுவரை அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

சிம்புவுடன் இணையும் ஏஆர் ரஹ்மான்
இந்நிலையில், தனுஷுக்காக இளன் ஒரு கதை தயார் செய்துள்ளதாகவும், விரைவில் இந்தப் படம் பற்றிய அப்டேட்கள் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. தனுஷுக்கு ஜோடியாக 'வெந்து தணிந்தது காடு' புகழ் சித்தி இத்னானி நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், தனுஷ் - இளன் இணையும் இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











