பெரிய பட்ஜெட்டில் உருவாகும் தனுஷின் புதிய திரைப்படம்!

சென்னை: தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் Netflix ல் ஜகமே தந்திரம் வெளியானது. படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

தனுஷ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தாலும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

எது எப்படி ஆயினும் தனுஷின் பட வரிசை ஒரு புறம் நீண்டு கொண்டே தான் போகிறது. தனுஷின் மார்கெட்டும் உயர்ந்து கொண்டு போகிறது.

நாடு திரும்பவுள்ளார்

நாடு திரும்பவுள்ளார்

The Gray Man எனும் ஹாலிவுட் படத்தில் நடிக்க தனுஷ் வெளிநாட்டிற்கு சென்று அங்கு படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ளார். பிப்ரவரி மாதமே வெளிநாட்டுக்கு சென்ற தனுஷ் எப்போது நாடு திரும்பவுள்ளார் என்று தகவல் இதுவரையில் வெளியாகவில்லை.

வரிசையில் படங்கள்

வரிசையில் படங்கள்

நாடு திரும்பிய உடன் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இது போக ராம்குமார் இயக்கும் படம், மாரி செல்வராஜ் இயக்கும் படம், வெற்றிமாறன் இயக்கும் படம் என தனுஷின் லைன் அப் வலுவாக உள்ளது. இதுமட்டுமின்றி தனுஷ் நடித்து கொடுக்க அவரது லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் உள்ளன.

சாய் பல்லவி

சாய் பல்லவி

இந்நிலையில் தேசிய விருது வென்ற இயக்குனரான சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

மூன்று மொழிகளில்

மூன்று மொழிகளில்

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது. அதனால் இதுவரை ரூ. 20 முதல் 25 கோடி பட்ஜெட்டில் படங்களை இயக்கி வந்த சேகர் கம்முலா இந்த படத்தை ரூ. 120 கோடி பட்ஜெட்டில் தயாராக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷின் மார்க்கெட் உயர்ந்து வரும் நிலையில் பெரிய பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X