இது வேற லெவல் அப்டேட்.. தனுஷுக்காக ஃபேண்டஸி கதையை உருவாக்கும் ராட்சசன் இயக்குநர்!
Recommended Video
சென்னை: ராட்சசன் படத்திற்கு பிறகு தனுஷை இயக்கவுள்ள இயக்குநர் ராம் குமார், தனுஷுக்காக ஃபேண்டஸி கதையை உருவாக்கி வருகிறாராம்.
தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் தமிழ் சினிமாவை இந்தியளவில் பெருமைப் படுத்தியது.
பொங்கல் அன்று வெளியான பட்டாஸ் திரைப்படமும் வசூல் ரீதியாக தனுஷுக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.
இந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் பல படங்கள் வரிசைக் கட்டி காத்திருக்கின்றன. இந்நிலையில், தனுஷ் - ராம் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளன.

பயங்கர பிஸி
இதற்கு முன் இல்லாத அளவுக்கு தற்போது நடிகர் தனுஷ் பயங்கர பிஸியாக தொடர்ந்து பல படங்களை கமீட் செய்து நடித்து வருகிறார். பொங்கலுக்கு தனுஷின் பட்டாஸ் படம் வெளியான நிலையில், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் டி40 படம் ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது.

பட்டாஸ் பொங்கல்
துரை செந்தில்குமார் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான தனுஷின் பட்டாஸ் திரைப்படம் பெரிய போட்டிகள் இல்லாததால், தியேட்டர்களில் சிறப்பாக ஓடி வருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக பட்டாஸ் அமைந்துள்ளதால் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், அடிமுறை எனும் தமிழர் கலையையும் பட்டாஸ் படம் உலகிற்கு வெளிச்சப்படுத்தி பாராட்டுக்களை அள்ளி வருகிறது.

கர்ணன்
கார்த்திக் சுப்புராஜின் படத்துக்கு சுருளி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்த்தில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் ஷூட்டிங்கில் தற்போது தனுஷ் பிஸியாக நடித்து வருகிறார்.

பாலிவுட் படம்
இதற்கிடையே பாலிவுட்டில் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாரா அலி கான் நடிக்கவுள்ளார் என்ற தகவல்களும் அண்மையில் கசிந்து வைரலாகி வருகின்றன.

ராட்சசன் ராம்குமார்
இந்நிலையில், ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் கதைக் களம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த முறை தனுஷுக்காக ஃபேண்டஸி கலந்த த்ரில்லர் கதையை இயக்குநர் ராம் குமார் உருவாக்கி உள்ளாராம். அந்த படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார் ராட்சசன் இயக்குநர்.

அடுத்த அநேகன்
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா தஸ்தூர் நடிப்பில் வெளியான அநேகன் படம் பல ஜென்மங்கள், சைக்காலஜி பிரச்சனை, கேமிங் என பல ஃபேண்டஸி விஷயங்களை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். அதே போல இந்த படம் உருவாகப் போகிறதா அல்லது அதைவிட மேலே சென்று வரலாற்று ஃபேண்டஸியாக இந்த படம் உருவாகுமா போன்ற ஆவல்கள் தனுஷ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்
தனுஷின் பட்டாஸ் படத்தை தயாரித்த சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தான் ராட்சசன் இயக்குநர் ராம்குமார் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தையும் தயாரிக்கவுள்ளது. பொங்கலுக்கு வெளியான பட்டாஸ் திரைப்படம் 25 கோடிக்கும் மேல் நல்ல கலெக்ஷனை ஈட்டிக் கொடுத்திருக்கும் நிலையில் அடுத்த படத்தையும் தயாரிக்க சத்ய ஜோதி நிறுவனம் முன்வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











