அனிருத் வாய்ஸில் ‘பட்டாஸ்’ 3வது சிங்கிள் ரிலீஸ்.. எப்படி இருக்கு ’ஜிகிடி கில்லாடி’?
சென்னை: துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், மெஹ்ரின் பிர்ஸடா, சிநேகா நடிப்பில் உருவாகியுள்ள 'பட்டாஸ்' படத்தின் 3வது சிங்கிள் பாடலான 'ஜிகிடி கில்லாடி' தற்போது வெளியாகியுள்ளது.
அனிருத் குரலில் ரொமான்டிக் மெலோடி பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலில் வரும் வித்தியாசமான வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள பட்டாஸ் படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.
ஜிகிடி கில்லாடி
குறும்புத்தனமான காதலில் செய்யும் அட்டகாசங்களை வர்ணிக்கும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது. இசை எங்கேயோ கேட்டது போல இருந்தாலும், பாடல் வரிகள் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக புதுசாக இருக்கிறது. பட்டாஸ் படத்தின் மூன்றாவது சிங்கிளான ஜிகிடி கில்லாடி பாடலை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
செமயா இருக்காரு
ஜிகிடி கில்லாடி பாடலில் நடிகர் தனுஷ் இளமையான லுக்கில் கூலிங் கிளாஸ் போட்டு இருக்கும் புகைப்படங்கள் லிரிக் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அந்த புகைப்படங்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து செமயா இருக்காரு பா தலைவர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
எம்புட்டு அழகு
பட்டாஸ் படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். இளமையான மகன் வேடத்தில் நாயகி மெஹ்ரின் பிர்ஸாவுடன் பாடும் டூயட் பாடலான ஜிகிடி கில்லாடி பாடலில் காரில் தனுஷ் வரும் புகைப்படங்களை பதிவிட்டு, எம்புட்டு அழகா இருக்க தலைவா என இந்த ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார்.
அனிருத் பேரை போட்டுருக்கலாமே
நடிகர் தனுஷ் - அனிருத் காம்போ நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த பாடல் மூலம் இணைந்துள்ளது. லிரிக் வீடியோவை வெளியிட்ட நடிகர் தனுஷ், அனிருத் பெயரை டேக் போடவில்லை. அதை நோட் பண்ணி இந்த ரசிகர், அதையும் போட்டிருக்கலாமே எனக் கேட்டுள்ளார்.
தரமா இருக்கு
ஜிகிடி கில்லாடி தரமா இருக்கு தலைவா என இந்த தனுஷ் ரசிகர் பட்டாஸ் 3வது சிங்கிள் பாடல் குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
ஹீரோயினை விட அழகு
எவ்ளோ அழகா ஹீரோயின் மெஹ்ரின் பிர்ஸடா இருந்தாலும், என் கண்ணுக்கு இவருதான் அழகா தெரிகிறார் என இந்த ரசிகர் தனுஷின் அழகை வர்ணித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











