மார்ஷியல் ஆர்ட்ஸ் தனுஷுக்கு கை கொடுக்குமா? எப்படி இருக்கிறது பட்டாஸ் டிரைலர்?
Recommended Video
மார்ஷியல் ஆர்ட்ஸ் தனுஷுக்கு கை கொடுக்குமா? எப்படி இருக்கிறது பட்டாஸ் டிரைலர்?
சென்னை: நடிகர் தனுஷின் பட்டாஸ் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், தனுஷ், மெஹ்ரின் பிர்சடா, சினேகா நடிப்பில் உருவாகியுள்ள படம் பட்டாஸ்.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக வரும் ஜனவரி 16ம் தேதி பட்டாஸ் படம் திரைக்கு வருகிறது.
தற்போது பட்டாஸ் படத்தின் அதிரடியான டிரைலர் வெளியாகி தனுஷ் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

மாமனாருடன் மோதல்
ரஜினியின் தர்பார் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது. சூப்பர்ஸ்டாரின் மருமகன் தனுஷின் பட்டாஸ் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 16ம் தேதி திரைக்கு வருகிறது. ஒரு வாரம் கேப் இருந்தாலும், பொங்கல் ரேஸில் மாமனாருடன் மோத தனுஷ் முடிவு செய்துள்ளார்.

துரை செந்தில்குமார்
சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர். தனுஷின் கொடி படத்தை கடைசியாக இயக்கிய துரை செந்தில்குமார் மறுபடியும் தனுஷை வைத்து பட்டாஸ் படத்தை இயக்கியுள்ளார்.

இரட்டை வேடம்
கொடி படத்தை தொடர்ந்து பட்டாஸ் படத்திலும் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கொடி படத்தில் அண்ணன், தம்பியாக நடித்த தனுஷ், இந்த படத்தில் அப்பா மகனாக நடிக்கிறார்.
டிரைலர் ரிலீஸ்
பொங்கல் பண்டிகை விருந்தாக தனுஷின் பட்டாஸ் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது தனுஷின் பட்டாஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் ஹாஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

எப்படி இருக்கு?
எம்.குமரன் சன் ஆஃப் மஹாலக்ஷ்மி, 7ம் அறிவு, சீமராஜா என பல படங்களின் சாயல் டிரைலரில் அப்பட்டமாக தெரிகிறது. மார்ஷியல் ஆர்ட்ஸை நம்பி உருவாகியுள்ள இந்த படம் தனுஷுக்கு எந்த அளவுக்கு ஹிட் கொடுக்கும் என்பது திரைக்கதையை நகரும் விதத்தை பொறுத்து தான் இருக்கிறது.
வைரலாகும் வசனம்
பேருக்கு பின்னாடி அப்பன் பேர் போட்டுகிறது மட்டும் புள்ளைக்கு பெருமை இல்லடா அந்த பேர காப்பாத்ர மாதிரி நடந்துக்கணும்.. என்கிற வசனம் தனுஷ் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











