'புதுப்பேட்டை'க்கு பிறகு வந்திருக்கணும்...திடீரென வைரலான, தனுஷின் 'திருடன் போலீஸ்' போஸ்டர்!

By

சென்னை: தனுஷ் நடித்த 'திருடன் போலீஸ்' படத்தின் போஸ்டர் திடீரென வைரலானதால், ரசிகர்கள் பரபரப்பானார்கள்.

Recommended Video

Dhanush's 'Thirudhan Police' movie poster goes viral | Lock Down

கடந்த 2006 ஆம் வருடம் செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் வெளியான படம், புதுப்பேட்டை.

சினேகா, சோனியா அகர்வால், அழகம்பெருமாள், பாலாசிங் உட்பட பலர் நடித்திருந்தனர். பாலகுமாரன் வசனம் எழுதி இருந்தார்.

கொக்கி குமார்

கொக்கி குமார்

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். தமிழில் வெளியான கேங்ஸ்டர் படங்களில் இந்தப் படத்துக்கு முக்கிய இடம் உண்டு. இதில், கொக்கி குமார் என்ற கேரக்டரில், சிறப்பாக நடித்திருப்பார், நடிகர் தனுஷ். அப்பாவி சிறுவன் ஒருவன் கொஞ்சம் கொஞ்சமாக இரக்கமில்லாத ரவுடியாக, மாறுவதுதான் 'புதுப்பேட்டை'யின் கதை.

அரவிந்த் கிருஷ்ணா

அரவிந்த் கிருஷ்ணா

இந்தப் படத்துக்கு பிறகு தனுஷ் நடிக்க இருந்த படம், 'திருடன் போலீஸ்'. இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இவர், செல்வராக வனின் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்களின் ஒளிப்பதிவாளர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருந்தார்.

போஸ்டர்

நா.முத்துக்குமார் பாடல்கள் எழுத இருந்தார். தனுஷின் சகோதரி, டாக்டர் விமலா கீதா, தனது ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இந்தப் படம் தொடக்க நிலையிலேயே கைவிட்டப்பட்டது. அதற்கான காரணம் தெரியவில்லை. இந்நிலையில் நாடு லாக் டவுன் ஆகியிருக்கிற நிலையில், இந்தப் படத்தின் போஸ்டர் ட்விட்டரில் திடீரென வைரலாகி உள்ளது.

அட்ரங்கி ரே

அட்ரங்கி ரே

இதற்கிடையே தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படத்தின் பாடல்கள், கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் கொரோனாவால் தள்ளிப் போயிருக்கிறது. அடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. அடுத்து, அட்ரங்கி ரே என்ற இந்தி படத்தில் அக்‌ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோருடன் நடிக்க இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X