தெலுங்கு மக்களின் தலைவனாக ஆகிறார் தனுஷ்?

சென்னை : கோலிவுட்,பாலிவுட் என இந்தியாவையும் கடந்து ஹாலிவுட்டிலும் நடித்து பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகர் தனுஷ்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வந்த மாறன் படப்பிடிப்பை முடித்த கையோடு யாரடி நீ மோகினி பட இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருசிற்றம்பலம் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ராஷு கண்ணா,நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் தெலுங்கு மக்களின் தலைவனாக நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

ப்ரஷ்ஷான த்ரில்லர்

ப்ரஷ்ஷான த்ரில்லர்

நடிப்பில் பல்வேறு அசுர அவதாரங்களை எடுத்து வரும் நடிகர் தனுஷ் தமிழ் ரசிகர்களை தொடர்ந்து பாலிவுட் ரசிகர்களின் ஃபேவரிட் நடிகராகவும் இருந்து வருகிறார். வெற்றிமாறன் கூட்டணியில் இணைந்து பணியாற்றி வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வரும் அதேசமயம் இளம் இயக்குனர்களுடனும் இணைந்து பணியாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ள தனுஷ் இப்பொழுது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்தில் நடித்து முடித்துள்ளார். ப்ரஷ்ஷான த்ரில்லர் கதைகளுக்கு பெயர் பெற்ற இயக்குனர் கார்த்திக் நரேன் மாறன் படத்தை தன்னுடைய பாணியில் பாதி தனுஷ் பாணியில் பாதி இயக்கியுள்ளேன் என தெரிவித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் தனுஷ் மிகவும் இளமையான தோற்றத்தில் நடித்திருக்க இவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன். நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு மொத்தமாக முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

கலகலப்பான படமாக

கலகலப்பான படமாக

இதையடுத்து யாரடி நீ மோகினி பட இயக்குனர் ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்த சில நாட்களிலேயே படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறு வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகிகளாக ராஷி கண்ணா, நித்யாமேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் நடித்து வருகின்றனர். யாரடி நீ மோகினி எவ்வாறு கலகலப்பான படமாக ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தைப் பெற்றதோ அதேபோல இந்த திரைப்படமும் கலகலப்பான குடும்ப பின்னணியில் உருவாகி வருகிறது. பிரகாஷ்ராஜ் மற்றும் பாரதிராஜா இதில் முக்கிய வேடத்தில் நடிக்க நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனிருத், தனுஷ் கூட்டணி இப்படத்தின் மூலம் இணைக்கிறது. சன் பிக்சர் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

விஜய்க்கு ஓபனிங் பாடல்

விஜய்க்கு ஓபனிங் பாடல்

மாஸ்டர் வெற்றிக்கு பிறகு விஜய் இப்பொழுது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வர படப்பிடிப்பு விறு விறு வேகத்தில் நடைபெற்று கொண்டுள்ளது. விஜய்க்கு வில்லனாக இயக்குனர் செல்வராகவன் இதில் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் தனுஷ் இப்படத்தில் ஒரு பாடல் ஒன்றையும் எழுத உள்ளார். அது விஜய்க்கு ஓபனிங் பாடலாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. தனுஷ் எழுதும் இந்தப் பாடலை அவரே சொந்தக் குரலில் பாட இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேகர் கம்முலா

சேகர் கம்முலா

தெலுங்கில் பல பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் சேகர் கம்முலா பெரும்பாலும் காதல் படங்களுக்கு பெயர் போனவர். லீடர்,லைஃப் இஸ் பியூட்டிஃபுல், ஃபிடா உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த இவர் இப்பொழுது நாக சைதன்யா, சாய்பல்லவி நடித்து வரும் லவ் ஸ்டோரி என்ற படத்தை இயக்கி உள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசுக்கு தயாராக இருந்தது ஆனால் கொரோனா காரணமாக இப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டது. மறு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை இதற்கிடையில் பாடல்கள் அனைத்தும் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை சேகர் கம்முலா வின் அமிகோ க்ரியேக்ஷன் இணைந்து தயாரித்து வருகிறது. தெலுங்கு,கன்னடம் மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.

தெலுங்கு மக்களின் தலைவனாக

தெலுங்கு மக்களின் தலைவனாக

லவ் ஸ்டோரி வெளியாவதற்கு முன்பாகவே அடுத்த படத்தின் வேலைகளை ஆரம்பித்த சேகர் கம்முலா அதில் நடிகர் தனுஷை ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்த படத்தின் கதை குறித்த விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளது. தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் இந்த படம் பீரியட் படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி 1950 காலகட்டத்தில் இப்படத்தின் கதை நடக்கிறது. ஆந்திரா தனி மாநிலமாக பிரிவதற்கு முன்னால் தமிழர்களும் தெலுங்கர்களும் மெட்ராஸ் மாகாணத்தில் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். தனித் தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டும் இன்றளவும் தெலுங்கு பேசும் மக்கள் அதிக அளவில் இங்கு வசிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தில் தனுஷ் மெட்ராஸ் மாகாணத்தைச் சேர்ந்த தெலுங்கு மக்களின் தலைவனாக நடிக்க உள்ளார் என தெரியவந்துள்ளது. மேலும் ஏழை மக்களின் வாழ்க்கையில் நடக்கும் அரசியலையும் உரிமைகளையும் பேசும் படமாக உருவாக உள்ளது. படப்பிடிப்பு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X