Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
600 மில்லியன்: யூடியூப்பில் புதிய சாதனை படைத்த தனுஷின் 'ரவுடி பேபி'
Recommended Video
சென்னை: மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடலை யூடியூபில் 600 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மாரி 2 படம் தனுஷ் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.
அந்த படத்தில் வந்த ரவுடி பேபி பாடலும் சரி, அதன் வீடியோவும் சரி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. தத்தித் தத்தி நடக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரவுடி பேபி பாடலை கேட்டால் டான்ஸ் ஆடுகிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் தனுஷ், தீ பாடிய ரவுடி பேபி பாடலுக்கு பிரபுதேவா தான் டான்ஸ் மாஸ்டர். அந்த பாடலுக்கு வித்தியாசமான முறையில் ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்து தனுஷ், சாய் பல்லவியை ஆட வைத்தார் பிரபுதேவா.
இப்படி வித்தியாசமாக உருவான ரவுடி பேபி பாடலை யூடியூபில் இதுவரை 600 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். யூடியூபில் 600 மில்லியன் வியூஸை தாண்டிய முதல் தென்னிந்திய பட பாடல் என்கிற பெருமையை பெற்றுள்ளது ரவுடி பேபி.
Unstoppable 🤩
— Wunderbar Films (@wunderbarfilms) August 13, 2019
600 MILLION BABY!#RowdyBaby #Maari2
🎵https://t.co/FMrdiRwd70 @dhanushkraja @Sai_Pallavi92 @thisisysr @directormbalaji @PDdancing @AlwaysJani @vinod_offl @divomovies @RIAZtheboss #RowdyBabyHits600MViews pic.twitter.com/ggOnoiSoxS
ரவுடி பேபி மேலும் புதிய சாதனை படைக்கும் என்று தனுஷ் ரசிகர்கள் நம்புகிறார்கள். 500 மில்லியன் பேர் பார்த்து ரசித்தபோதே ரவுடி பேபியின் சாதனை தொடரும் என்று தெரிவித்தார்கள் தனுஷ் ரசிகர்கள். அவர்கள் கூறியது போன்றே நடந்துவிட்டது. ரவுடி பேபி அடுத்த சாதனை படைக்கும் வரை காத்திருப்போமாக.
ரவுடி பேபி பாடலை எழுதியது நம்ம தனுஷ் தான். முதன் முதலாக பாடலை கேட்டவர்கள் என்னடா இது தனுஷ் ஒரு மார்க்கமாக எழுதியிருக்கிறாரே என்றார்கள். ஆனால் அந்த பாடலை கேட்க, கேட்க அனைவருக்கும் பிடித்துவிட்டது.
கலவர பூமியான பிக்பாஸ் வீடு.. டபுள் கேம் ஆடும் வனிதா.. கோபப்படும் சாண்டி.. முகென் கையில என்ன ஆச்சு?
தனுஷ் தற்போது துரை செந்தில் குமார் இயக்கத்தில் பட்டாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பட்டாஸ் படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். அசுரன் படம் மூலம் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கோலிவுட் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.