தென்னிந்தியாவிலேயே இதுதான் பர்ஸ்ட்டாமே... இப்படியொரு அசத்தல் சாதனையில் தனுஷின் 'ரவுடி பேபி'!
சென்னை: தனுஷின் ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் மெகா சாதனை படைத்துள்ளது.
தனுஷ், காஜல் அகர்வால் நடித்த படம், மாரி. கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆனது.
இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் உருவானது. இதில் தனுஷுடன், சாய் பல்லவி ஹீரோயினாக நடித்தார்.

நீண்ட இடைவெளி
கிருஷ்ணா, டோவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படங்களை பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். மாரி 2 படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தனுஷ் படத்துக்கு இசை அமைத்திருந்தார் யுவன்.

ஏகப்பட்ட வரவேற்பு
இந்தப் படத்தில் இடம்பெற்ற, ரவுடி பேபி என்ற பாடல், படம் வெளியான போதே சூப்பர் ஹிட்டானது. இந்தப் பாடலை தனுஷ் பாடியிருக்கிறார். இந்தப் பாடலின் விடியோவுக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட வரவேற்பு. இதன் நடன இயக்குநர் பிரபுதேவா, தனுஷ், நடிகை சாய் பல்லவிக்குப் பாராட்டுகள் குவிந்தன.

சர்வதேச கவனிப்பு
கடந்த வருட ஏப்ரல் மாதம், யூடியூப்பில் இந்தப் பாடல் 40 கோடி பார்வைகளைப் பெற்று சாதனைப் படைத்தது. பின்னர் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டது. யூடியூப்பில் தமிழ்ப் பாடல்களில் அதிகமானவர்கள் ரசித்த பாடலாகவும் சாதனைப் படைத்தது. கடந்த டிசம்பர் மாதம் இந்தப் பாடலை 72 கோடி பார்த்திருந்தனர்.

பாடல் படைக்கும்
இந்திய அளவில் கடந்த வருடம் டிரெண்டான யூடியூப் வீடியோக்களில் இந்தப் பாடல் முதலிடம் பிடித்தது. சர்வதேச அளவில் 7 வது இடம் பெற்றிருந்தது. மேலும் பல சாதனைகளை இந்தப் பாடல் படைக்கும் என்றும் அப்போது கூறப்பட்டது. 100 கோடி வியூஸ் பெற்ற முதல் இந்திய பாடலாக, ரவுடி பேபி சாதிக்கும் என்றும் கூறப்பட்டது.

தென்னிந்திய பாடல்
அந்தச் சாதனையை இப்போது படைத்துள்ளது, ரவுடி பேபி. அதாவது 100 கோடி பார்வைகளைப் பெற்று சாதித்துள்ளது இந்த பாடல். இதன் மூலம் இந்தச் சாதனையை பெற்ற முதல் தென்னிந்திய பாடலாக, ரவுடி பேபி திகழ்கிறது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார், தனுஷ்.

பில்லியன் பார்வை
அதில், 'என்ன ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வு இது. 'கொலவெறி' பாடலின் 9 வது ஆண்டு விழாவில், ரவுடி பேபி, ஒரு பில்லியன் பார்வைகளைப் பெற்றிருக்கிறது. ஒரு பில்லியனை தொட்ட முதல் தென்னிந்திய பாடல் இதுதான் என்பதில் பெருமை அடைகிறோம். மாரி 2 படத்தின் மொத்த டீமுக்கும் நன்றி' என்று கூறியுள்ளார் தனுஷ். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications