அடேங்கப்பா... சாதித்தது ரவுடி பேபி: இந்திய அளவில் பர்ஸ்ட், உலகளவில் 7-வது இடம்!
Recommended Video
சென்னை: தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யுடியூப் இணையதளத்தில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்த படம், மாரி. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் உருவானது. இதையும் பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். அவர் ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் படம் வெளியான போதே ஹிட்டானது. இந்த பாடலின் விடியோ சமூக வலைத்தளங்களில் அதிக வரவேற்பைப் பெற்றன. இதன் நடன இயக்குநர் பிரபுதேவா, நடிகர் தனுஷ், நடிகை சாய் பல்லவிக்கு பாராட்டுகள் குவிந்தன.
கடந்த ஏப்ரலில், யூடியூப் பட்டியலில் இந்தப் பாடல் 40 கோடி பார்வையாளர்களைப் பெற்று மிரட்டியது. இதனால் இந்தப் பாடல் சர்வதேச அளவில் கவனிக்கப்பட்டது. யூடியூப்பில் தமிழ்ப் பாடல்களில் அதிகமானவர்கள் ரசித்த பாடலாகவும் இது சாதனை படைத்தது.
இப்போது இந்த பாடலை 72 கோடி பார்த்துள்ளனர். இந்நிலையில், இந்திய அளவில் இந்த வருடம் டிரெண்டிங்கான யுயூடியூப் வீடியோக்களில் இந்த பாடல் முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் 7 வது இடம் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











