Tere Ishk Mein Review - தேரே இஷ்க் மெய்ன் எமோஷனல் லவ் ஸ்டோரி.. தனுஷுக்கு விருது நிச்சயம்.. பிரபலம் விமர்சனம்

சென்னை: தனுஷ் - ஆனந்த் எல்.ராய் கூட்டணியில் உருவாகியிருக்கிறது தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இன்று இத்திரைப்படம் வெளியாகியிருக்கும் நிலையில் பிரபல விமர்சகர் உமைர் சந்து தனது எக்ஸ் பக்கத்தில் படம் பற்றிய விமர்சனத்தை பதிவிட்டிருக்கிறார்.

தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்ததால் அடுத்த படமான தேரே இஷ்க் மெய்ன் படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ஆனந்த் எல்.ராய் இயக்கியிருக்கிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடிக்க; இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இன்று உலகம் முழுவதும் படம் ரிலீஸாகிறது.

எப்படி இருக்கும் படம்?: ஏற்கனவே தனுஷும், ஆனந்த் எல்.ராயும் ராஞ்சனா படத்தில் இணைந்திருந்தார்கள். பாலிவுட்டில் தனுஷ் அறிமுகமான படம் அதுதான். அப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 100 கோடி ரூபாய் வசூலித்தது. இதனால் அவருக்கு ஹிந்தியிலும் மார்க்கெட் உருவாகி அங்கும் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அப்படம் போன்றே இதுவும் வெற்றி பெற வேண்டும் என்று D ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.

Dhanush s Tere Ishk Mein Review Umair Sandhu Praises the Film
Photo Credit:

காதல் ஜானர்தான் படம்: இந்தப் படமும் காதல் ஜானரில்தான் உருவாகியிருக்கிறது. ட்ரெய்லரை பார்க்கையிலேயே இப்படம் கண்டிப்பாக ரசிகர்களை கலங்க வைப்பது உறுதி என்று தெரிந்தது. தனுஷும் தன்னுடைய சிறந்த நடிப்பை டெலிவர் செய்திருப்பதும் உறுதியானது. போதாக்குறைக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை வேறு ரசிகர்களை கிறங்க செய்தது. மேலும் எனக்கு லவ் ஃபெயிலியர் முகம் இருப்பதால்தான் இப்படி நடிக்க இயக்குநர் கூப்பிட்டதாகவும் தனுஷ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று ரிலீஸ்: மிகப்பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருக்கும் இந்தப் படம் இன்று ரிலீஸாகிறது. தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவிருக்கிறது. அதேசமயம் இப்படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் தமிழ்நாட்டில் சரியாக இல்லை; அதற்கு காரணம் குபேரா ரிசல்டதான் என்று பலரும் சொல்லிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல விமர்சகர் உமைர் சந்து தேரே இஷ்க் மெய்ன் படத்தின் விமர்சனத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

எப்படி இருக்கு படம்?: அதன்படி அவர், "தேரே இஷ்க் மெய்ன் 2025ஆம் ஆண்டு வெளியான சிறந்த காதல் கதை. காட்சிகளும், பின்னணி இசையும் சிலிர்க்க வைக்கின்றன. க்ளைமேக்ஸ் காட்சிதான் படத்தின் மொத்த ஆன்மா. தனுஷ், கீர்த்தி சனோன் தங்களது மிகச்சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். இப்படத்துக்காக அவர்கள் இரண்டு பேருக்குமே விருது கிடைக்கும். நிச்சயம் படத்தை பாருங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X