Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தனுஷின் தங்கமகன் பாடல்கள் நவம்பர் 27 முதல்
சென்னை: தனது நடிப்பில் உருவாகியிருக்கும் தங்கமகன் படத்தின் பாடல்களை நவம்பர் 27 ம் தேதி வெளியிடவிருப்பதாக தனுஷ் தெரிவித்து இருக்கிறார்.
தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தங்கமகன். வேலை இல்லாப் பட்டதாரி 2 என்று தலைப்பு வைக்கபட்டு பின்னர் தங்கமகனாக இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை நவம்பர் 27 ம் தேதியில் வெளியிடுவதாக தனுஷ் அறிவித்து இருக்கிறார். நவம்பர் 26 நள்ளிரவில் இப்படத்தின் பாடல்களை ஐடியூனில் கேட்டு மகிழலாம் என்று அவர் மேலும் தெரிவித்து இருக்கிறார்.
நானும் ரவுடிதான் படத்தின் வெற்றிக்குப் பின்னர் அனிருத் இசையில் உருவாகி இருக்கும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கண்டிப்பாக ஹிட்டாகும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
#Thangamagan audio releases on 27th Nov..iTunes on 26th midnight! #dna #D29 #A11 @Samanthaprabhu2 @iamAmyJackson pic.twitter.com/MkFPBSENFH
— Dhanush (@dhanushkraja) November 18, 2015
இதற்கிடையில் தங்கமகன் படம் வருகின்ற டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது. அதே நாளில் உதயநிதி ஸ்டாலின் - எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் கெத்து படமும் வெளியாகிறது.
தங்கமகன், கெத்து 2 திரைப்படங்களிலும் நாயகியாக எமி ஜாக்சன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வேலை இல்லாப் பட்டதாரி படத்தில் தனது இசையால் ஷாக்கடிக்க வைத்த அனிருத், தங்கமகனில் என்ன வித்தியாசம் காட்டியிருக்கிறார் என்று காத்திருந்து பார்க்கலாம்.