கொல மாஸ்.. தனுஷின் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு இங்கு தான் நடக்குதாம்.. வைரலாகும் வீடியோ!

சென்னை: அவெஞ்சர்ஸ் படம் இயக்கிய ருசோ சகோதரர்களின் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு தள வீடியோக்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

பிரம்மாண்ட மலைப் பகுதியில் தி கிரே மேன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

பெரிய பெரிய ஃபாரீன் டிரக்குகளை கொண்டு ஆக்‌ஷன் காட்சி ஒன்றை படக்குழு படமாக்கி வருகின்றனர்.

200 மில்லியன் டாலர்

200 மில்லியன் டாலர்

கோலிவுட், பாலிவுட் என கலக்கிய நடிகர் தனுஷ் ஏற்கனவே பிரெஞ்சு படம் ஒன்றில் நடித்திருந்த நிலையில், தற்போது அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ருசோ சகோதரர்கள் இயக்கத்தில் 200 மில்லியன் டாலர் மதிப்பில் உருவாகி வரும் தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

கேப்டன் அமெரிக்கா

கேப்டன் அமெரிக்கா

அவெஞ்சர்ஸ் படங்களில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் கலக்கிய கிறிஸ் எவான்ஸ், பிளேடு ரன்னர், லா லா லேண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரியான் கோஸ்லிங்ஸ், அனா டி ஆர்மஸ், ஜெஸிகா ஹென்விக், வாக்னர் முரா, ஜூலியா பட்டர்ஸ் மற்றும் ரீஜ் ஜீன் பேஜ் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களுடன் இந்த படத்தில் நடிகர் தனுஷும் இணைந்து நடித்து வருவது வேற லெவல் பெருமை.

லீக்கான வீடியோக்கள்

நெட்பிளிக்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பான தி கிரே மேன் படத்தின் புகைப்படங்கள், படப்பிடிப்பு தள வீடியோக்கள் என சமூக வலைதளங்களில் கசிந்துள்ளவை உலகளவில் வைரலாகி வருகின்றன. தற்போது தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்பு எங்கே நடக்கிறது என்கிற வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

பிரம்மாண்ட மலைப் பகுதியில்

பிரம்மாண்ட மலைப் பகுதியில்

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வரும் தி கிரே மேன் படப்பிடிப்பு தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள வாஸ்குஸ் பாறைகள் எனும் இடத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. அதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல ஷேர் செய்து வருகின்றனர்.

 பெரிய டிரக்குகள்

பெரிய டிரக்குகள்

பெரிய இரண்டு டிரக்குகளையும் படப்பிடிப்பு தளத்தில் காண முடிகிறது. கொள்ளை சம்பவம் அல்லது மிகப்பெரிய சண்டை காட்சியை இந்த இடத்தில் படமாக்குவார்கள் என கருதப்படுகிறது. படு வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் தி கிரே மேன் திரைப்படம் வெளியாகுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X