வெளியானது தனுஷின்’தி கிரே மேன்’ பட சண்டைக்காட்சி..இணையத்தில் ட்ரெண்டிங்
சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இந்த மாதத்தில் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இம்மாதம் 22ம் தேதி அவர் நடிப்பில் உருவாகியுள்ள தி க்ரே மேன் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் ஹாலிவுட் வரை தனது எல்லைகளை விரிவுப் படுத்தியுள்ளார். வித்தியாசமான தேடல்களுடன் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வருகிறார். தற்போது தமிழில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி போன்ற படங்கள் உள்ளன.

அடுத்தடுத்த படங்கள்
இதில் திருச்சிற்றம்பலம் விரைவில் ரிலீசாக உள்ளது. அவரது சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனிடையே தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ள வாத்தி படத்தின் சூட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின்மூலம் முதல்முறையாக தெலுங்கிலும் தனுஷ் அறிமுகமாகவுள்ளார்.

தி க்ரே மேன் படம்
இந்நிலையில் அவர் நடித்துள்ள ஹாலிவுட் படம் தி க்ரே மேன் வரும் 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்காக தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தப் படத்தில் தனுஷ் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவரது போஸ்டர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நெட்பிளிக்சில் வெளியீடு
இந்தப் படத்தின்மூலம் ஹாலிவுட் ரசிகர்களையும் கவரும் முயற்சியில் தனுஷ் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தை அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இயக்கியுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய ரசிகர்களையும் கவரும்வகையில் தனுஷ் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளார்.
தனுஷின் ஃபைட் சீன்
இந்நிலையில் தற்போது தனுஷ் இடம்பெற்றுள்ள பைட் சீன் வெளியாகியுள்ளது. படத்தின் இயக்குநர்கள் ரூசோ சகோதரர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இந்த காட்சியை வெளியிட்டுள்ளனர். இந்தக் காட்சியில் ஆக்ரோஷமான தனுஷை பார்க்க முடிகிறது. இந்த காட்சிகள் தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
Recommended Video

அமெரிக்காவில் பிரமோஷன்
முன்னதாக அமெரிக்காவில் நடைபெற்ற படத்தின் பிரமோஷனில் பங்கேற்ற தனுஷ், இத்தகைய பிரம்மாண்டமான வாய்ப்பிற்காகவே தான் காத்திருந்ததாகவும், இந்தப் படத்தில் தான் எப்படி நடித்து முடித்தேன் என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்திற்காக தற்போது அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











