தனுஷின் ஹாலிவுட் படம் தி கிரே மேன்... வெளியானது சூப்பர் பர்ஸ்ட் லுக்!
சென்னை : நடிகர் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் தி க்ரே மேன். வரும் ஜூலை 22ம் தேதி நேரடியாக இந்தப் படம் நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது. இந்தியாவில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் சர்வதேச தரத்தில் தன்னை சிறந்த நடிகராக நிலைநிறுத்தியுள்ளார். கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட், டோலிவுட் மற்றும் ஹாலிவுட் வரையில் தன்னுடைய திரைப்பயணத்தை விரிவுப் படுத்தியுள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் பாலிவுட் படமான கலாட்டா கல்யாணம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

தி கிரே மேன் ஹாலிவுட் படம்
இந்நிலையில் தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரே மேன் படம் வரும் ஜூலை 22ம் தேதி நேரடியாக நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை சில மாதங்களுக்கு முன்னதாகவே தனுஷ் முடித்துக் கொடுத்துள்ளார். இதையடுத்தே மாறன், நானே வருவேன், திருச்சிற்றம்பலம் மற்றும் வாத்திப் படங்களின் சூட்டிங்கில் அவர் இணைந்தார்.

அடுத்தடுத்த படங்களில் பிசி
இதில் மாறன் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், நானே வருவேன் படத்தின் சூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. தொடர்ந்து வாத்தி படத்தின் சூட்டிங்கில் தனுஷ் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படம் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது.

தி கிரே மேன் பர்ஸ்ட் லுக்
இதனிடையே, தனுஷின் தி கிரே மேன் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், தனுஷ், அனா டீ அர்மாஸ், ஜெசிகா ஹென்விக், வாக்னர் மோரா, ஜூலியா பட்டர்ஸ் மற்றும் ரெஜி ஜீன் பேஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நெகட்டிவ் ரோலில் தனுஷ்
இதில் தனுஷ் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு முறை பர்ஸ்ட் லுக் வெளியாகும்போது அவரது போஸ்டர் மற்றும் வெளியிடப்படாமல் உள்ளது தனுஷ் ரசிகர்களை மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாக்கி வருகிறது. தற்போது கிறிஸ் இவான்ஸ், ரியான் கோஸ்லிங் மற்றும் அனா டீ ஆர்மாஸ் உள்ளிட்ட 4 பேரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

வைரலாகும் தனுஷ் படம்
ரூசோ சகோதரர்கள் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஹென்றி ஜாக்மேன் இசையமைத்துள்ளார். இதனிடையே கிறிஸ் இவான்சுடன் தனுஷ் உள்ள புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் வழக்கம்போல மிகவும் எளிமையாக காணப்படுகிறார் தனுஷ்.

அடுத்த வாரத்தில் ட்ரெயிலர்?
மிகவும் எதிர்பார்ப்பிற்கிடையில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் அடுத்த வாரத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனிடையே படம் நெட்பிளிக்சில் வெளியாவதற்கு முன்னதாக திரையரங்குகளில் வரும் ஜூலை 15ம் தேதி ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications