நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா? தனுஷிற்கு கிடைத்த மற்றுமொரு கௌரவம்!

சென்னை : நெட்பிளிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட படமாக தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான தி கிரே மேன் இடம் பிடித்துள்ளது.

நெட்டிஃபிளிக்சின் பிரம்மாண்ட தயாரிப்பாக, ருசோ பிரதர்ஸ் இயக்கத்தில் தி கிரே மேன் என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் 'தி கிரே மேன்'

கடந்த ஆண்டு ஜுலை 18 ம் தேதி அமெரிக்கா திரையரங்கில் வெளியான இப்படம் ஜுலை 22 ந் தேதி நெட்ஃபிளிக்சில் வெளியிடப்பட்டது.

தி கிரே மேன்

தி கிரே மேன்

தனுஷின் முதல் ஹாலிவுட் படம் என்பதால் இந்தியாவிலும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்ட இப்படத்தில், இந்த படத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், தனுஷ் முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர். இந்திய மதிப்பில் ஆயிரத்து 500 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் மிரட்டலான இசை ஆகிய டீசர், டிரைலர் ஆகியவை அசத்தலாக இருந்தது.

மிரட்டலான வில்லன்

மிரட்டலான வில்லன்

இந்த படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியானதிலிருந்து தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா முழுவதும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. தி கிரே மேன் படத்தில் Avik San என்ற கொலைகாரன் கேரக்டரில் தனுஷ் நடித்திருந்தார். சில நிமிடங்களே வந்தாலும் தனுஷின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்றாலும், தனுஷிற்காக ரசிகர்கள் இந்த படத்தை ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்த்தனர்.

அதிரடி சண்டை காட்சிகள்

அதிரடி சண்டை காட்சிகள்

வழக்கமான ஹாலிவுட் படங்கள் போல இந்த தி கிரே மேன் படத்திலும் சண்டை காட்சிகள் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு உள்ளது. தி கிரே மேன் ஆக்சன் பட ரசிகர்களை மிரள வைத்தது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இரு மகன்களுடன் வேட்டி சட்டையில் தனுஷ் கலந்து கொண்டார்.

அதிகம் பார்க்கப்பட்ட படம்

அதிகம் பார்க்கப்பட்ட படம்

இந்நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், தனுஷ் நடித்த தி கிரே மேன் திரைப்படத்தை உலக அளவில் அதிகம் பேர் பார்க்கப்பட்ட படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலால் தனுஷின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படம் ஆங்கிலத்தை தவிர தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் உள்ளிட்ட சில மொழிகளிலும் வெளியானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X