Thiruchitrambalam Box Office: இதுதான் மாஸ்.. திருச்சிற்றம்பலம் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் எது மாஸ் என நடிகர் தனுஷ் பேசியது ஏகப்பட்ட மீம்களாக டிரெண்டாகின.

Recommended Video

Thiruchitrambalam Public Review | Thiruchitrambalam Review | Thiruchitrambalam | Dhanush | *Review

இந்நிலையில், திருச்சிற்றம்பலம் முதல் நாளிலேயே மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது தான் மாஸ் என தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால், பாக்ஸ் ஆபிஸை தட்டித் தூக்க காத்திருக்கிறது திருச்சிற்றம்பலம்.

பாசிட்டிவ் விமர்சனங்கள்

பாசிட்டிவ் விமர்சனங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். கதை புதிதாக இல்லை என்றாலும், திரைக்கதை மற்றும் காட்சி அமைப்பில் சுவாரஸ்யத்தையும் காமெடியையும் கலந்து இயக்குநர் மித்ரன் ஜவகர் ஒரு ஃபீல் குட் மூவியாக திருச்சிற்றம்பலத்தை கொடுத்த நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்கள் படத்திற்கு கிடைத்திருக்கிறது.

டிரெண்டிங்கில் நித்யா மேனன்

டிரெண்டிங்கில் நித்யா மேனன்

திருச்சிற்றம்பலம் படம் வெளியான நிலையில், தனுஷ் டிரெண்டிங்கில் வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, நித்யா மேனன் டிரெண்டிங்கில் வந்தது மிகப்பெரிய ஆச்சர்யத்தை அளித்துள்ளது. அந்த அளவுக்கு சோபனா எனும் கதாபாத்திரத்தில் நல்ல தோழியாக வாழ்ந்திருக்கிறார் நித்யா மேனன். இப்படியொரு ஃபிரெண்ட் நமக்கு கிடைக்க மாட்டாங்களா என ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.

திருச்சிற்றம்பலம் வசூல்

திருச்சிற்றம்பலம் வசூல்

திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஒட்டுமொத்தமாக முதல் நாளில் 9 கோடி ரூபாய் வசூலை ஈட்டி அசத்தி உள்ளது. சமீபத்தில் வெளியான அமீர்கானின் லால் சிங் சத்தா பான் இந்திய படமே முதல் நாளில் 11 கோடி தான் வசூல் செய்தது. ஆனால், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திருச்சிற்றம்பலம் முதல் நாளிலேயே 9 கோடியை வசூல் செய்திருப்பது சன் பிக்சர்ஸ்க்கு மிகப்பெரிய லாபமாக பார்க்கப்படுகிறது.

தொடர் விடுமுறை

தொடர் விடுமுறை

கடந்த வாரம் விருமன் படத்துக்கு கிடைத்ததை போலவே 4 நாட்கள் கலெக்‌ஷனை திருச்சிற்றம்பலம் படமும் தட்டித் தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமையான இன்று விடுமுறை என்பதால், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை திருச்சிற்றம்பலம் படத்துக்கு சாதகமாக மாறி உள்ளது.

நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸ்

சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள நிலையில், சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அடுத்த மாதம் திருச்சிற்றம்பலம் வெளியாகும். ஆனால், தனுஷ் ரசிகர்கள் ஒன்றரை வருடத்திற்கு பிறகு தனுஷ் படம் தியேட்டரில் வெளியாகி இருப்பதால் படத்தை அதற்குள் தியேட்டரில் பார்த்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாக மாற்றி விடுவார்கள் என்பது கன்ஃபார்ம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X