விக்ரம் படத்திற்கு பிறகு வசூலில் சிக்ஸர் அடித்த திருச்சிற்றம்பலம்: செலிப்ரேஷன் மோடில் தனுஷ்

சென்னை: திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியால் நடிகர் தனுஷ் மிகுந்த உற்சாகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Recommended Video

Thiruchitrambalam | STR, Dhanush படத்தை பார்க்காதே-னு சொன்னாரா? | Cool Suresh *Kollywood

மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள திருச்சிற்றம்பலம் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

பாசிட்டிவ்வான விமர்சனத்தால் முதல் வாரத்தில் வசூலில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தனுஷ் உற்சாகம்

தனுஷ் உற்சாகம்

'அசுரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு தனுஷின் நடிப்பில் ஜகமே தந்திரம், மாறன், இந்தியில் அத்ரங்கி ரே, ஹாலிவுட்டில் தி கிரே மேன் ஆகிய படங்கள் வெளியாகின. இந்த 4 படங்களுமே நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸானது. ஆனால், தமிழ் படங்களான ஜகமே தந்திரம், மாறன் படங்கள் ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களைப் பெற்றன. இதனால் கடுப்பில் இருந்த தனுஷ் இப்போது திருச்சிற்றம்பலம் படத்தால் ரொம்பவே உற்சாகமாக காணப்படுகிறார்.

சூப்பர் டூப்பர் ஹிட்

சூப்பர் டூப்பர் ஹிட்

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் என தனுஷுடன் ஏற்கனவே பணிபுரிந்த மித்ரன் ஜவஹர், திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கியுள்ளார். தமிழில் ஏற்கனவே பல படங்களில் பார்த்து பழகிப் போன கதையாக இருந்தாலும், திரைக்கதையும் மேக்கிங்கும் ஃப்ரெஷ்ஷாக இருந்ததால் திருச்சிற்றம்பலம் படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக நித்யா மேனனின் ஷோபனா என்ற பெஸ்டி கேரக்டர், தமிழ் ரசிகர்களிடம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றிக் கொண்டாட்டம்

வெற்றிக் கொண்டாட்டம்

அசுரன் படத்திற்கு தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. படம் வெளியானதில் இருந்தே எல்லா தரப்பு ரசிகர்களிடமும் இருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருவதால், சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் திருச்சிற்றம்பலம் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருகின்றனர். இதனை தனுஷ் தனது திருச்சிற்றம்பலம் அணியுடன் செலிப்ரேட் செய்துள்ளார்.

8 நாட்களில் வசூல் நிலவரம்

8 நாட்களில் வசூல் நிலவரம்

சென்ற வாரம் 18ம் தேதி வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம், கடந்த 8 நாட்களாக வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது. முதல் நாளில் .9 புள்ளி 52 கோடியையும், 2வது நாளில் 8 புள்ளி 79 கோடியையும் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், முதல் வாரத்தில் மட்டும் 51 புள்ளி 42 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. மொத்தமாக 8 நாட்களில் இதுவரை 59 புள்ளி 50 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கமலின் விக்ரம் படத்திற்கு தமிழ் சினிமாவில் சூப்பர் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் எனவும் சொல்லப்படுகிறது. அதேபோல், வரும் நாட்களில் திருச்சிற்றம்பலம் வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X