50 நாள் கொண்டாட்டத்தில் திருச்சிற்றம்பலம் படம்.. ஃபீல் குட் மூவி.. ரசிகர்கள் கமெண்ட்!

சென்னை : நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்தது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் தனுஷ் மற்றும் நித்யா மேனனின் போட்டிப் போட்ட நடிப்பு பாராட்டிற்கு உள்ளானது.

மேலும் படத்தில் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டவர்களின் நடிப்பும் படத்தில் முக்கியமான பங்கு வகித்தது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஓடிடியில் அவரது 4 படங்கள் ஜகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன் மற்றும் தி க்ரே மேன் என ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என வெளியான நிலையில், அவரது படங்கள் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

திருச்சிற்றம்பலம் படம்

திருச்சிற்றம்பலம் படம்

அவர்களது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் படம் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. ரசிகர்கள் இந்தப் படத்தின் இயல்பான மற்றும் எளிமையான கதையால் கவரப்பட்ட நிலையில், படம் சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளது.

100 கோடி ரூபாய் கிளப்

100 கோடி ரூபாய் கிளப்

படம் வெளியான 13 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு இத்தகைய வெற்றியை தனுஷின் படம் பெற்றுள்ளது அவரை மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை எளிமையான கதைக்களத்துடன் அணுகியுள்ளார் இயக்குநர் மித்ரன் ஜவஹர்.

வெற்றிக் கூட்டணி

வெற்றிக் கூட்டணி

தனுஷுடனான அவரது முந்தைய படங்கள் யாரடி நீ மோகினி, குட்டி போன்ற படங்களும் சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், தற்போது திருச்சிற்றம்பலம் படமும் அந்த வெற்றிப்படங்களின் வரிசையில் இணைந்துள்ளது. இதனிடையே தற்போது இந்தப் படம் வெளியாகி 50 நாட்களை திரையரங்குகளில் வெற்றிகரமாக கழித்துள்ளது.

50 நாட்களை கடந்த திருச்சிற்றம்பலம் படம்

50 நாட்களை கடந்த திருச்சிற்றம்பலம் படம்

இதையொட்டி படக்குழுவினர் போஸ்டர் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். தனுஷின் நானே வருவேன் படம் கடந்த வாரத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக அவரது வாத்தி படம் இருமொழிப்படமாக டிசம்பர் 2ம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே திருச்சிற்றம்பலம் படம் தொடர்ந்து பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருவது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ்

கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ்

அடுத்தடுத்தப் படங்களை சிறப்பான மற்றும் வித்தியாசமான ஜானர்களில் கொடுத்து வருகிறார் தனுஷ். இவரது அடுத்தடுத்தப் படங்கள் ரிலீசாக உள்ள நிலையில், டோலிவுட்டிலும் வாத்தி படம்மூலம் அடியெடுத்து வைக்கவுள்ளார். இந்நிலையில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X