8 நாள் முடிவில் தனுஷ் படம் குவிச்சிருக்கற வசூலை பாருங்க.. கலக்கல் காம்போவின் வெற்றி!

சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்புடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது திருச்சிற்றம்பலம் படம்.

Recommended Video

Thiruchitrambalam Movie Review | Yessa ? Bussa ? | திருச்சிற்றம்பலம் | Dhanush|*Review

இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் தனது பார்மிற்கு திரும்பியுள்ளார். அவரது நடிப்பில் அடுத்தடுத்து நானே வருவேன், வாத்தி படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தொடர்ந்து 4 படங்கள் ஓடிடி ரிலீசால் கடுப்பில் இருந்த தனுஷ் ரசிகர்களும் தற்போது உற்சாகமடைந்துள்ளனர்.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் எப்போதுமே தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர். இதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் தனுஷ். தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வரும் தனுஷ், சில சொதப்பல்களையும் சந்தித்தவர். ஆனாலும் இவரை, இவரது ரசிகர்கள் எப்போதும் விட்டுக் கொடுக்காமல் உள்ளனர்.

திருச்சிற்றம்பலம் படம்

திருச்சிற்றம்பலம் படம்

தொடர்ந்து தனுஷின் 4 படங்கள் ஓடிடியில் ரிலீசான நிலையில், கடந்த 18ம் தேதி இவரது திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் ரிலீசானது. முன்னதாக இந்தப் படத்தை நயன்தாரா, ஹன்சிகா மற்றும் சமந்தாவை கொண்டு தனுஷே தனது வொன்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது.

மீண்டும் வெற்றிக் கூட்டணி

மீண்டும் வெற்றிக் கூட்டணி

ஆனால் சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்ததால் இந்த திட்டத்தை அவர் கைவிட்டதாகவும் கூறப்படுகிறது. மித்ரன் ஜவஹருடன் இந்தப் படத்தின்மூலம் 4வது முறையாக இணைந்துள்ளார் தனுஷ். முன்னதாக இவர்கள் கூட்டணியில் உருவான யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்கள் தனுஷின் கேரியர் பெஸ்டடாக அமைந்தவை.

சிறப்பான வசூல்

சிறப்பான வசூல்

இந்நிலையில் கடந்த 18ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான திருச்சிற்றம்பலம் படம் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. தனுஷ் ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தின் வசூல் கடந்த 8 நாட்களில் அதிரி புதிரியாக அமைந்துள்ளது. கடந்த 8 நாட்களில் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் இந்தப் படம் 68 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது.

சிறப்பான கேரக்டர்கள்

சிறப்பான கேரக்டர்கள்

தொடர்ந்து வாரயிறுதி நாட்களாக அமையவுள்ள நிலையில், இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கண்ணா என அனைவருமே தங்களது கேரக்டரை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

நட்பிற்கு முக்கியத்துவம்

நட்பிற்கு முக்கியத்துவம்

மொத்தத்தில் பேமிலி என்டர்டெயினராக, நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக அமைந்துள்ள திருச்சிற்றம்பலம் படம் தனுஷிற்கு சிறப்பாக கைகொடுத்துள்ளது. தன்னுடைய சொந்த வாழ்க்கையில் மாறுபாடு, தன்னுடைய படங்கள் சரியான வரவேற்பை பெறாதது என அடுத்தடுத்த பிரச்சினைகளை சந்தித்துவந்த தனுஷிற்கு இந்தப் படத்தின் வெற்றி ஆசுவாசத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X