தனுஷ் பிறந்தநாளில் வெளியாகும் திருச்சிற்றம்பலம்?... தொடர்ந்து ட்ரெண்டிங்கில் படம்!
சென்னை : நடிகர் தனுஷின் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாகி அவரது ரசிர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான மாறன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தொடர்ந்து தனுஷின் 3 படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அவரது ஜகமே தந்திரம், கல்யாண கலாட்டா மற்றும் மாறன் படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகின.
இந்நிலையில் அவரது நடிப்பில் அடுத்ததாக திருச்சிற்றம்பலம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் தன்னுடைய சிறப்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். தமிழ் நடிகர் என்ற வட்டத்தில் முன்னணி நடிகர்கள் தமிழில் காணப்படும் நிலையில், தான் அந்த வட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல் பாலிவுட், ஹாலிவுட் என சிறப்பாக நடித்து வருகிறார். தற்போது டோலிவுட்டிலும் வாத்தி படம் மூலம் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

அடுத்தடுத்த ஓடிடி ரிலீஸ்
இவரது ஜகமே தந்திரம், கல்யாண கலாட்டா மற்றும் மாறன் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகின. இந்த மூன்று படங்களுமே நேரடியாக ஓடிடியில் ரிலீசான நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றன. இந்நிலையில் இவரது அடுத்த படமாவது திரையரங்குகளில் ரிலீசாக வேண்டும் என இவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ரிலீசுக்கு தயாரான திருச்சிற்றம்பலம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இவரது திருச்சிற்றம்பலம் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்படும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டிற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வரும் ஜூலை 28ம் தேதி அவரது பிறந்தநாளையொட்டி இந்தப் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிறந்தநாளில் திருச்சிற்றம்பலம் ரிலீஸ்?
ஜூலை 22ம் தேதி தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள தி க்ரே மேன் ஹாலிவுட் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படமும் அவரது பிறந்தநாளையொட்டி ஜூலை கடைசி வாரத்தில் ரிலீஸ் செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ட்ரெண்டிங்கில் திருச்சிற்றம்பலம்
நேற்றைய தினம் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்த நிலையில், திருச்சிற்றம்பலம் ரிலீஸ் குறித்த அறிவிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதையொட்டி திருச்சிற்றம்பலம் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்தது.

ரசிகர்கள் ஏமாற்றம்
இந்நிலையில் ஆர்யாவின் கேப்டன் படத்தின் தமிழக வெளியீடு குறித்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் தொடர்ந்து இன்றும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது.

விரைவில் அறிவிப்பு
சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று ரசிகர்கள் தொடர்ந்து காத்திருப்பில் உள்ளனர். மித்ரன் கே ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தனுஷிற்கு கைக்கொடுக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தனுஷின் அடுத்தடுத்த படங்கள்
இந்நிலையில் தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துவரும் வாத்தி படத்தின் சூட்டிங்கும் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் போஸ்டரில் மாணவர் கெட்டப்பில் தனுஷ் காணப்பட்டார். ஆனால் படத்தின் தலைப்பு வாத்தி என்று இருக்கும் நிலையில் படம் குறித்த ஆவல் ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.


Click it and Unblock the Notifications











