4 நாட்களில் தனுஷ் படம் எவ்வளவு வசூல் தெரியுமா.. கேட்டா அசந்து போயிடுவீங்க!

சென்னை : நடிகர் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு ரிலீசானது திருச்சிற்றம்பலம்.

Recommended Video

Thiruchitrambalam Movie Review | Yessa ? Bussa ? | திருச்சிற்றம்பலம் | Dhanush|*Review

தனுஷின் அடுத்தடுத்த நான்கு படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியான நிலையில், இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி அவரது ரசிகர்களுக்கு ஆசுவாசத்தை ஏற்படுத்தியிருந்தது.

நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியாகியுள்ள இந்தப் படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ஓடிடியில் வெளியாகின. பெரிதும் எதிர்பார்ப்புக்கு உள்ளன ஜெகமே தந்திரம், அத்ராங்கி ரே, மாறன் மற்றும் தி க்ரே மேன் ஆகிய தனுஷின் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையில், அவரது படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

திருச்சிற்றம்பலம் படம்

திருச்சிற்றம்பலம் படம்

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு மிகுந்த எதர்பார்ப்பு இருந்த நிலையில், நட்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியாகியுள்ள இந்தப் படம் மிகச்சிறந்த வரவேற்பை பெற்று, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

சிறப்பான நித்யா மேனன் நடிப்பு

சிறப்பான நித்யா மேனன் நடிப்பு

படத்தில் தனுஷின் தோழியாக நடித்துள்ள நித்யா மேனன், தன்னுடைய இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். தனுஷ் வழக்கம்போல சிறப்பாக நடித்து தன்னுடைய ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளார். ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்களுக்கு நடிக்க சிறிது ஸ்கோப்பே இருந்த நிலையில், அவர்கள் அதை சிறப்பாக பயன்படுத்தியுள்ளனர்.

4வது முறையாக கூட்டணி

4வது முறையாக கூட்டணி

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் மற்றும் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. முன்னதாக தனுஷ் மற்றும் மித்ரன் ஜவஹர் கூட்டணி யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமப்புத்திரன் ஆகியப்படங்களில் இணைந்திருந்த நிலையில், தற்போது நான்காவது முறையாக மீண்டும் இணைந்து வெற்றியை தந்துள்ளது.

பாரதிராஜாவின் மிரட்டல் நடிப்பு

பாரதிராஜாவின் மிரட்டல் நடிப்பு

படத்தில் பிரகாஷ்ராஜ் தனுஷின் அப்பாவாகவும் தாத்தாவாக பாரதிராஜாவும் நடித்துள்ளனர். இவர்களுக்கு படத்தில் வெயிட்டான கேரக்டர் அமைந்துள்ளது. குறிப்பாக பாரதிராஜா -தனுஷ் இடையிலான கெமிஸ்ட்ரி மிகவும் சிறப்பாக வொர்க் அவுட் ஆகியுள்ளது. பிரகாஷ்ராஜும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

4 நாட்களில் சூப்பர் கலெக்ஷன்

4 நாட்களில் சூப்பர் கலெக்ஷன்

மொத்தத்தில் அனைவரையும் கவர்ந்துள்ள இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் இந்தப் படத்தின் வசூல் 50 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளதாம். தொடர்ந்து படம் மேலும் 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பாக கைக்கொடுத்த படம்

சிறப்பாக கைக்கொடுத்த படம்

தனுஷ் நீண்ட நாட்களாக சிறப்பான ஒரு வெற்றிக்காக காத்திருந்த நிலையில், தற்போது இந்தப் படம் அவருக்கு கைக்கொடுத்துள்ளது. மேலும் சமீப காலங்களாக அவரது படங்களில் மிஸ்ஸாகி இருந்த, பக்கத்து வீட்டு பையன் லுக் இந்தப் படத்தில் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. அவரது பலமே இதுதான் என்பதை இயக்குநர் உணர்ந்து செயல்பட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X