ராஷி கண்ணா.. பிரியா பவானி சங்கர்.. இப்போ நித்யா மேனன்.. அடுத்தது யாரு.. காத்திருக்கும் ரசிகர்கள்!
சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம். இந்தப் படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ளார்.
படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மாறன் படத்தின் கலவையான விமர்சனங்களை அடுத்து தனுஷின் இந்தப் படத்தை ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்துள்ளனர்.
விரைவில் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ஓடிடியில் வெளியான நிலையில் தனுஷை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தனுஷின் திருச்சிற்றம்பலம் படம்
நடிகர் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் திருச்சிற்றம்பலம். தனுஷின் மாறன் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்தப் படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர்.

அடுத்தடுத்த ஓடிடி படங்கள்
படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது. முன்னதாக தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கலாட்டா கல்யாணம், மாறன் என அடுத்தடுத்த படங்கள் ஓடிடியில் வெளியானது. இதனால் தனுஷே ஏமாற்றத்துடன் காணப்பட்டார்.

தி கிரே மேன் ஓடிடி ரிலீஸ்
அடுத்ததாக அவரது நடிப்பில் ஜூலையில் வெளியாகவுள்ள தி கிரே மேன் ஹாலிவுட் படமும் ஓடிடியில்தான் வெளியாகவுள்ளது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் பிறந்தநாளையொட்டி இந்தப் படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

திருச்சிற்றம்பலம் கேரக்டர்கள்
இந்நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் கேரக்டர்களை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது. இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் ஷேர் செய்து வருகிறார். தினந்தோறும் ஒரு கேரக்டர்களை கடந்த சில தினங்களாக இவர் வெளியிட்டு வருகிறார்.

ராஷி கண்ணா அறிமுகம்
முதலில் ராஷிக்கண்ணாவை அறிமுகம் செய்தார் தனுஷ். படத்தில் அவர் தனுஷின் பள்ளி தோழியாக அனுஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதேபோல அடுத்ததாக பிரியா பவானி சங்கர், ரஞ்சனியாக கிராமத்து தென்றலாக நடித்துள்ளார். தற்போது படத்தின் அடுத்த நாயகி நித்யா மேனனையும் அறிமுகப்படுத்தியுள்ளார் தனுஷ்.

நெருங்கிய தோழி நித்யா மேனன்
நித்யா மேனன் ஷோபனா என்ற கேரக்டரில் திருச்சிற்றம்பலத்தின் நெருங்கிய தோழியாக படத்தில் நடித்துள்ளார். இதேபோல பிரகாஷ் ராஜ், இன்ஸ்பெக்டர் நீலகண்டன் என்ற கேரக்டரிலும் சீனியர் திருச்சிற்றம்பலம் கேரக்டரில் பாரதிராஜாவுடம் நடித்துள்ளனர். தொடர்ந்து அடுத்தடுத்த கேரக்டர்களை படக்குழு அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











