மறைந்த நடிகர் ரகுவரனுக்கு அஞ்சலி... வேலையில்லாப் பட்டதாரி படத்தில் தனுஷ் பெயர் ரகுவரன்!

சென்னை: மறைந்த வில்லன் நடிகர் ரகுவரனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே வேலையில்லாப் பட்டதாரி படத்தில் தனுஷ் கதாபாத்திரத்துக்கு ரகுவரன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் தனுஷின் 25வது படம் வேலையில்லாப் பட்டதாரி. இப்படம் கடந்தவாரம் ரிலீசானது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார்.

இப்படத்தில் தனுஷின் கதாபாத்திரத்தின் பெயர் ரகுவரன்.

யாரடி நீ மோகினி...

யாரடி நீ மோகினி...

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான 'யாரடி நீ மோகினி' படத்தில் தனுஷும், ரகுவரனும் அப்பா,மகனாக நடித்திருந்தனர். அப்படத்தில் பாதியிலேயே ரகுவரன் இறந்து விடுவார். அப்படம் வெளிவருவதற்குள்ளாகவே ரகுவரன் நிஜத்திலும் காலமானார்.

அப்பா - மகன்...

அப்பா - மகன்...

இப்படத்தில் தனுஷ் -ரகுவரன் கதாபாத்திரங்கள் மிகவும் இயல்பாக அமைக்கப்பட்டிருந்தது. எனவே, ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்தது.

அஞ்சலி....

அஞ்சலி....

வேலையில்லாப் பட்டதாரி படத்தில் தனுஷ் கதாபாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தபோது ரகுவரனை நினைவு கூறும் வகையில் அவரது பெயரை வைக்க தீர்மானிக்கப்பட்டதாம்.

தனுஷின் பஞ்ச்...

தனுஷின் பஞ்ச்...

ரகுவரன் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தே புகழ் பெற்றவர். எனவே, இப்படத்தில் ‘ரகுவரனை வில்லனாதானே பார்த்திருப்ப, ஹீரோவா பார்த்ததில்லையே. இனிமே பார்ப்ப...' என தனுஷ் பேசுவது போன்று ஒரு வசனம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X