தனுஷின் திருச்சிற்றம்பலம் செகண்ட் சிங்கிள்..“மேகம் கருக்காதா“.. சும்மா தரமான மெலோடி!

சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இதனை தயாரித்துள்ளார்.

நடிகர்கள் தனுஷ், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாரதிராஜா, ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் இதில் நடித்துள்ளேன். வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி இந்தப் படம் வெள்ளித்திரையில் வெளியாகவுள்ளது.

தனுஷ்

தனுஷ்

தமிழ் சினிமாவில் பன்முகத்திறன் கொண்ட நடிகர்களுள் ஒருவர் தனுஷ். நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறன் கொண்ட தனுஷின் நடித்த அசுரன் திரைப்படத்திற்கு பிறகு எந்த படமும் வெற்றி பெறவில்லை. தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே, மாறன் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாகி சொதப்பின. குறிப்பாக மாறன் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து கடுமையான விமர்சனங்களை பெற்றது.

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

இதனால் அடுத்து எப்படியாவது ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் தனுஷ் இருக்கிறார். திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய படங்களை மலைபோல் நம்பியுள்ளார். இதில் திருச்சிற்றம்பலத்தின் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படம் அடுத்த மாதம் 18ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார்.

தாய்கிழவி

தாய்கிழவி

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் மற்றும் அனிருத் திருச்சிற்றம்பலம் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'தாய்க்கிழவி' பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்தப் பாடலை தனுஷ் எழுதி அவரே பாடியிருந்தார். இந்த பாடல் யூ டியூபில் 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்தது.

இரண்டாவது பாடல்

இந்நிலையில், திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து இரண்டாவது பாடலான 'மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே' பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை தனுஷ் பாடி உள்ளார். மேலும், இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இந்தப் படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். அனிருத் இசையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மெல்லோடி பாடல் வெளியாகி உள்ளால் ரசிகர்கள் பாடலை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X