Vaathi Box Office: திருச்சிற்றம்பலம் அளவுக்கு கூட்டம் வரலையே.. வசூலில் சரிவை சந்திக்கும் வாத்தி?

சென்னை: தனுஷின் வாத்தி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கடந்த பிப்ரவரி 17ம் தேதி வெளியானது. முதல் வார முடிவில் வசூல் வேட்டை நடத்திய வாத்தி திரைப்படம் வார நாட்களில் வசூலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மற்றும் சமுத்திரகனி நடித்த வாத்தி திரைப்படம் கல்வியில் நடைபெறும் வியாபாரத்தை மையமாக வைத்து உருவானது.

தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தில் தெலுங்கு வாடை அதிகம் வீசுவதாக கடும் விமர்சனங்கள் கிளம்பின.

படையெடுக்கும் தெலுங்கு இயக்குநர்கள்

படையெடுக்கும் தெலுங்கு இயக்குநர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களை தெலுங்கு இயக்குநர்கள் சமீப காலமாக இயக்கி வருகின்றனர். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை அனுதீப் இயக்கிய நிலையில், வம்சி விஜய்யின் வாரிசு படத்தை இயக்கினார். இந்நிலையில், நடிகர் தனுஷின் வாத்தி படத்தை வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். அடுத்ததாக சேகர் கம்முலா படத்திலும் தனுஷ் நடிக்க உள்ளார்.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

தனுஷின் வாத்திக்கு பாசிட்டிவான விமர்சனங்களும் அதே சமயத்தில் படம் பைலிங்குவலாக உருவாக்கப்பட்ட நிலையில், பல இடங்களில் தெலுங்கு வாடை அடிப்பதாகவும் கலவையான விமர்சனங்கள் குவிந்தன. ஆனால், விமர்சனங்களை கடந்து முதல் வாரத்தில் வாத்தி திரைப்படம் திரையரங்குகளில் சிறப்பாகவே ஓடியது.

65 கோடி வசூல்

65 கோடி வசூல்

வாத்தி திரைப்படம் முதல் 3 நாட்களிலேயே உலகளவில் 51 கோடி வசூலை கடந்து விட்டதாகவும் இதுவரை 65 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் வெங்கி அட்லூரி தனுஷ் நடித்து அசத்தி உள்ள வாத்தி படத்தை அதிகளவில் இளைஞர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

திருச்சிற்றம்பலம் அளவுக்கு இல்லை

திருச்சிற்றம்பலம் அளவுக்கு இல்லை

வார இறுதி நாட்களில் இருந்த வசூல் வேகம் வார நாட்களில் ரொம்பவே குறைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருச்சிற்றம்பலம் படத்துக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று படத்தை கொண்டாடிய நிலையில், அந்த படம் 100 கோடி கிளப்பில் இணைந்தது. ஆனால், வாத்தி படம் அந்த அளவுக்கு வசூல் ஈட்டுமா? என்பது கேள்விக் குறியாக உள்ளது என்கின்றனர்.

இந்த வாரம் தெரிந்து விடும்

இந்த வாரம் தெரிந்து விடும்

வாத்தி திரைப்படம் 4 வாரம் டோலிவுட்டிலும், 8 வாரங்கள் வரை தமிழ்நாட்டிலும் ஓடும் என இயக்குநர் வெங்கி அட்லூரி கூறியிருந்தார். ஆனால், போகிற போக்கை பார்த்தால் வாத்தி திரைப்படம் 2 வாரங்கள் மட்டுமே ஓடும் என கூறப்படுகிறது. இந்த வார இறுதியிலும் படம் பிக்கப் ஆனால், தான் பெரிய வசூல் வேட்டையை ஈட்டும் எனக் கூறுகின்றனர். அதிகபட்சமாக 80 முதல் 85 கோடி வசூல் வரை வாத்தி ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் மில்லரில் பிஸி

கேப்டன் மில்லரில் பிஸி

வாத்தி திரைப்படத்தின் ரிலீஸ் மற்றும் புது மனை புகு விழா என நடிகர் தனுஷ் கடந்த சில நாட்களாக கேப்டன் மில்லர் ஷூட்டிங்கிற்கு ஓய்வு விடுத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அந்த படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக பங்கேற்று வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கேப்டன் மில்லர் படத்துக்காக தனுஷ் பெரும் உழைப்பை போட்டு வரும் நிலையில், அந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X