Vaathi Day 2 Box Office Collection: வீக்கெண்டில் குவிந்த மாணவர்கள் கூட்டம்.. வசூல் வேட்டையில் வாத்தி

சென்னை: இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மற்றும் சமுத்திரகனி நடிப்பில் பிப்ரவரி 17ம் தேதி வெளியான வாத்தி திரைப்படம் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா/தெலங்கானாவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

தனுஷின் வாத்தி திரைப்படத்திற்கு அதிகப்படியான பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சனி மற்றும் ஞாயிறு வீக்கெண்டை வாத்தி உடன் தியேட்டரில் கொண்டாட குவிந்து வருகின்றனர்.

முதல் நாளிலேயே நல்ல வசூல் ஈட்டிய தனுஷின் வாத்தி திரைப்படம் 2ம் நாளிலும் வசூல் வேட்டையாடி வருகிறது.

தனுஷின் வாத்தி

தனுஷின் வாத்தி

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் பைலிங்குவல் படமாக உருவாகி உள்ள வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் கலவையான விமர்சனங்கள் இந்த படத்திற்கு குவிந்து வருகிறது.

பாடல்கள் சூப்பர் ஹிட்

பாடல்கள் சூப்பர் ஹிட்

ஒரு தலை காதல சொல்ல.. பாடல் ரிலீஸ் ஆனவுடனே சூப்பர் ஹிட் அடித்த நிலையில், நாடோடி மன்னன் பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவான வாத்தி படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

8 வாரம் ஓடும்

8 வாரம் ஓடும்

வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி வாத்தி படம் டோலிவுட்டில் 4 வாரங்கள் வெற்றிகரமாக ஓடும் என்றும் தமிழ்நாட்டில் 8 வாரங்கள் ஓடும் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருந்தார். இந்நிலையில், முதல் வாரத்தில் தியேட்டர்களில் வெற்றிகரமாக வசூல் வேட்டை ஆடி வருகிறது வாத்தி திரைப்படம்.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

வாத்தி திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 9 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. உலகம் முழுவதும் 12 முதல் 14 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை தயாரிப்பு நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. வாரிசு படத்திற்கு அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு வெளியான நிலையில், வாத்தி படத்திற்கும் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

2ம் நாள் எவ்வளவு

2ம் நாள் எவ்வளவு

வாத்தி திரைப்படம் 2ம் நாளில் அதிகபட்சமாக 11 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகளவில் 2 நாட்களிலும் சேர்த்து அதிகபட்சமாக 24 முதல் 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஞாயிற்றுக்கிழமை வசூல் உடன் முதல் வாரத்தை சிறப்பாக நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களிலும் வாத்தி திரைப்படம் நல்ல வசூலை குவிக்கும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

மாணவர்கள் அட்டன்டன்ஸ்

மாணவர்கள் அட்டன்டன்ஸ்

நடிகர் தனுஷுக்கு ஏகப்பட்ட இளம் ரசிகர்கள் உள்ள நிலையில், வாத்தி படத்தை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பார்க்க தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். ட்ரெய்லரில் தனுஷ் சொன்னது போல தனுஷ் ரசிகர்கள் மற்றும் மாணவர்கள் தியேட்டரில் ஃபுல் அட்டன்டன்ஸ் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X