தனுஷின் வாத்தி படம் இதுவரைக்கும் எவ்ளோ வசூலிச்சிருக்கு தெரியுமா.. தெரிஞ்சிக்கலாம் வாங்க!

சென்னை : நடிகர் தனுஷின் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது வாத்தி படம்.

இந்தப் படம் தெலுங்கிலும் சார் என்ற பெயரில் வெளியானது. இதன்மூலம் டோலிவுட்டிலும் அறிமுகமாகியுள்ளார் தனுஷ்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து வருகிறார் தனுஷ். கடந்த ஆண்டில் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் என இரண்டு படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இதில் நித்யா மேனனுடன் இணைந்து தனுஷ் நடித்திருந்த திருச்சிற்றம்பலம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது.

வாத்தி படம்

வாத்தி படம்

இதையடுத்து இந்த ஆண்டின் துவக்கத்திலேயே தனுஷின் வாத்தி படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் இந்தப் படம் தமிழில் வாத்தி எனவும் தெலுங்கில் சார் எனவும் ஒரே நேரத்தில் ரிலீசானது. படத்தில் தனுஷிற்கு ஜோடியாகியுள்ளார் சம்யுக்தா.

 கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்


கல்விக்கான தேவையை முன்னிருத்தி வெளியான வாத்தி படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் தற்போது 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் தெலுங்கிலும் நேரடியாக அறிமுகமாகியுள்ளார் தனுஷ். படம் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. வசூலிலும் பட்டையை கிளப்பியுள்ளது.

வாத்தி சக்சஸ் மீட்

வாத்தி சக்சஸ் மீட்

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் சக்சஸ் மீட்டும் நடத்தப்பட்டுள்ளது. இதில் வெங்கி அட்லூரி, தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இதுவரை படம் சர்வதேச அளவில் 102 கோடி ரூபாய்களை வசூலித்த நிலையில், படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதனால் வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி50 படம்

டி50 படம்

தனுஷின் அடுத்தடுத்த படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதையடுத்து அவரும் அவருடைய ரசிகர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவரும் தனுஷ், அடுத்ததாக தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் டி50 படத்தை இயக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X