வைரலாகும் தனுஷ் படத்தின் போஸ்டர்... தனுஷ் என்ன சொன்னாருன்னு பாக்கலாமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகின்றன. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான மாறன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக அவர் தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன் வாத்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி வருகின்றன. அவரது ஜகமே தந்திரம், அட்ராங்கி ரே, மாறன் படங்கள் அடுத்தடுத்து நேரடியாக ஓடிடியில் ரிலீசாகிய நிலையில் இந்தப் படங்கள் கலவையான விமர்சனங்களையே பெற்றன. அவரது நடிப்பில் ஹாலிவுட் படமான தி க்ரே மேன் படம் வரும் ஜூலை மாதத்தில் நெட்பிளிக்சில் ரிலீசாக உள்ளது.

தனுஷின் விவாகரத்து முடிவு

தனுஷின் விவாகரத்து முடிவு

இந்தப் படமும் நேரடி ஓடிடி ரிலீசாகவே வெளியாக உள்ளது. இந்தப் படமும் தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதனிடையே சூப்பர்ஸ்டார் மகள் ஐஸ்வர்யா தனுஷை விவாகரத்து செய்யும் முடிவை சமீபத்தில் தனுஷ் அறிவித்திருந்தார். இந்த முடிவு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இன்டஸ்ட்ரியையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

முதல் இருமொழி படம்

முதல் இருமொழி படம்

இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், தனது சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் மற்றும் தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் வாத்தி படம் ஆகிய படங்களில் தனுஷ் ரொம்பவே பிசி. வாத்தி மற்றும் சார் என தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கி வருகிறார்.

தனுஷிற்கு ஜோடியான சம்யுக்தா மேனன்

தனுஷிற்கு ஜோடியான சம்யுக்தா மேனன்

படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூர் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்து வருகிறது. படத்தில் தனுஷிற்கு சம்யுக்தா மேனன் ஜோடியாகியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் வெங்கி அட்லுரிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அட்லுரியுடன் தான் இருக்கும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தனுஷ்.

புகைப்படம் வெளியிட்ட தனுஷ்

புகைப்படம் வெளியிட்ட தனுஷ்

முதல்முறையாக நேரடியாக தான் இருமொழிகளில் நடிக்கும் வாத்தி (சார்) படத்தின் இயக்குநர் வெங்கி அட்லுரி என்று அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக அமையவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனுஷின் வாத்தி படத்தில் அவர் மாணவனாக நடித்து வருவதாக தெரியும் நிலையில் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

இந்நிலையில் படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை தனுஷ் வெளியிட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தப் புகைப்படத்தில் தனுஷ் மிகவும் இளமையாக காணப்படுகிறார். மேலும் இயக்குநருடன் இணைந்து எந்த விஷயத்திற்காகவோ மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X