சில தினங்களில் துவங்கும் வாத்தி சூட்டிங்... ட்ரெண்டிங்கில் தனுஷ்
சென்னை : நடிகர் தனுஷ் தமிழ், தெலுங்கில் நடிக்கவுள்ள படம் வாத்தி. தெலுங்கில் சார்.
இந்தப் படத்தின்மூலம் தனுஷ் தெலுங்கில் நேரடி படத்தில் அறிமுகமாகவுள்ளார்.
தற்போது தன்னுடைய சகோதரரும் இயக்குநருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஹாலிவுட் , பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என எதையும் விட்டு வைப்பதில்லை. கதைதான் முக்கியமே தவிர மொழி முக்கியமில்லை என்று தனது சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

அட்ராங்கி ரே படம்
சமீபத்தில் அவரது நடிப்பில் பாலிவுட்டில் அட்ராங்கி ரே படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அவர் இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளார். தனுஷின் நடிப்பு இந்தப் படத்தில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

நானே வருவேன் படம்
இந்நிலையில் தமிழில் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து தனது அண்ணனும் பிரபல இயக்குநருமான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.

வாத்தி படத்தின் சூட்டிங்
அடுத்ததாக தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள படத்தில் தற்போது அவர் கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தகவல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

புரபசராக தனுஷ்
வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் தனுஷிற்கு நாயகியாக சம்யுக்தா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். படத்தில் தனுஷ் புரபசராக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் டீசரை சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

எகிறும் எதிர்பார்ப்பு
ஏற்கனவே கொடி படத்தில் புரபசராக தனுஷ் நடித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின்மூலம் தெலுங்கில் நேரடியாக தனுஷ் அறிமுகமாகவுள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











