வாத்தி டிக்கெட் புக்கிங் ஓபன்... தெலுங்கு ரசிகர்களின் அதிருப்தியால் தனுஷ் அதிர்ச்சி..?

ஹைதராபாத்: தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனையடுத்து வாத்தி படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இன்று முதல் தொடங்கியது.

இதனிடையே சார் என்ற டைட்டிலில் வெளியாகும் வாத்தி படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு டோலிவுட் ரசிகர்களிடம் அதிருப்தி காணப்படுவதாக சொல்லப்படுகிறது.

 தனுஷின் வாத்தி

தனுஷின் வாத்தி

திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கடந்தாண்டே திரையரங்குகளில் வெளியாக வேண்டிய படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம், கடந்த டிசம்பரில் வெளியாகும் என சொல்லப்பட்டது. சில காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழில் வாத்தியாகவும், தெலுங்கில் சார் என்ற தலைப்பிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 டிக்கெட் புக்கிங் ஓபன்

டிக்கெட் புக்கிங் ஓபன்

தனுஷுடன் சம்யுக்தா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள வாத்தி படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள சாய்ராம் கல்லூரியில் கடந்த வாரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் சார் என்ற டைட்டிலில் இந்தப் படம் வெளியாவதால், ஹைதராபாத்திலும் இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனிடையே வாத்தி படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் இன்று முதல் தொடங்கியுள்ளது.

 தெலுங்கு ரசிகர்கள் அதிருப்தி

தெலுங்கு ரசிகர்கள் அதிருப்தி

வாத்தி இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் பங்கேற்றார். அதேபோல் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற சார் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷ் கலந்துகொண்டார். அப்போது ஆரம்பத்தில் சில வார்த்தைகளை தெலுங்கில் பேசிய தனுஷ், அதன்பிறகு நான் தமிழிலேயே பேசுகிறேன் எனக் கூறினார்.

 சார் சக்சஸ் ஆகுமா..?

சார் சக்சஸ் ஆகுமா..?

தெலுங்கு சரளமாக தெரியாததால் தமிழில் பேசுவதாக சொன்னதும் ரசிகர்கள் சிலர் அதனை ஏற்றுக்கொண்டனர். மேலும் பல ரசிகர்கள் தனுஷ் தெலுங்கை புறக்கணிக்கிறார் என்ற ரீதியில் புரிந்துகொண்டதாக தெரிகிறது. இதனால் அங்கே ரசிகர்களிடமிருந்து சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தமிழில் பேசி இருக்கிறார் தனுஷ். அப்போது அங்கிருந்த தெலுங்கு ரசிகர்கள் எங்களுக்கு தமிழ் புரியவில்லை என்று கூறியுள்ளனர். இதனையடுத்து தனுஷ் ஆங்கிலத்தில் பேசிவிட்டு வெளியேறியுள்ளார்.

 நெட்டிசன்கள் ட்ரோல்

நெட்டிசன்கள் ட்ரோல்

இந்த சம்பவத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து தனுஷ் பேசிய வீடியோவை வைரலாக்கினர். மேலும் டோலிவுட் ரசிகர்கள் தனுஷுக்கு எதிரான கருத்துக்களையும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் தனுஷின் சார் திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறுமா என படக்குழுவினரே சந்தேகத்தில் உள்ளார்களாம். இதனிடையே டிக்கெட் புக்கிங் தொடங்கியும் வாத்தி படத்திற்கான ஆன்லைன் ரிசர்வேஷன் இன்னும் சூடுபிடிக்கவில்லை என்ற தகவலும் வைரலாகி வருகிறது. தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படமும் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X