இந்தியில் ரீமேக் ஆகும் வேலையில்லா பட்டதாரி… தனுஷ்தான் ஹீரோ
தனுஷ் தயாரித்து நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் இந்தியில் தயாராக உள்ளது. அதிலும் தனுஷ்தான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவருக்கு ஜோடி யார் என்பது முடிவாகவில்லை.
தனுஷ்-அமலாபால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்த படம் ‘வேலையில்லா பட்டதாரி'. தனுஷ் சொந்த நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியிருந்தார்.

பாலிவுட் போகும் விஐபி
வசூல் சாதனையோடு 75 நாட்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை தற்போது இந்தியிலும் படமாக்க முடிவு செய்துள்ளனர்.

தனுஷ்தான் ஹீரோ
இந்தியில் தனுஷ் கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்திருந்ததில், தற்போது தனுஷையே இந்தியிலும் நடிக்கவைக்க முடிவு செய்துள்ளனர்.

பாலிவுட் பிரபலம்
தனுஷ் இந்தியில் நடித்த ‘ராஞ்சனா' படம் பெரும் வெற்றியடைந்தது. அப்படத்தை தொடர்ந்து தற்போது அமிதாப்பச்சனுடன் இணைந்து ‘ஷமிதாப்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

ஜோடி யார்?
ஆகையால், வேலையில்லா பட்டதாரி படத்தின் இந்தி ரீமேக்கிலும் தனுஷையே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்கள். ஆனால் ஹீரோயின் யார் என்று இன்னமும் முடிவாகவில்லை. விஐபி படத்தை தமிழில் இயக்கிய வேல்ராஜே இந்தியிலும் இயக்குவார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











