twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வேலையில்லா பட்டதாரி படத்திற்கு எதிராக திரளும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவர்கள்

    By Mayura Akilan
    |

    "தம்பி மாதிரி என்னைய செயின்ட் ஜான்ஸ் பள்ளியிலா படிக்க வைத்தீர்கள்?. ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் தானே படிக்க வைத்தீர்கள். அதனால் ஆங்கிலம் சரளமாக என்னால் பேசமுடியவில்லை. எனக்கு எங்கும் வேலையும் கிடைக்கவில்லை" என்று தனுஷ் தன்னுடைய வேலையில்லா பட்டதாரி படத்தில் வசனம் பேசியிருப்பார்.

    இந்த வசனத்துக்கு ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வசனத்தை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்கள்.

    தண்டச்சோறு என்று திட்டும் தந்தையிடம் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டும் தனுஷ், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்த காரணத்தால்தான் தன்னால் ஆங்கிலம் பேசமுடியவில்லை என்று தாழ்வுமனப்பான்மையோடு இருப்பதாக வசனம் பேசியிருப்பார்.

    நீதிமன்றத்தில் வழக்கு

    நீதிமன்றத்தில் வழக்கு

    இந்த வசனக்காட்சி ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவர்களை புண்படுத்துவதாக உள்ளது என்று பள்ளியின் முன்னாள் மாணவர் டாக்டர் காவிதாசன் தெரிவித்து உள்ளார். வசனக் காட்சியை நீக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    தனுசுக்கு கண்டனம்

    தனுசுக்கு கண்டனம்

    ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி பாரம்பரியமானது. இந்தியா முழுவதும் 150 கல்வி நிறுவனங்களுடன் இது செயல்படுகிறது. நல்ல தலைவர்களை இப்பள்ளி உருவாக்கி வருகிறது. இந்த படத்தை இயக்கிய டைரக்டருக்கும், இதில் நடித்த தனுசுக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம் என்று பள்ளி நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

    ஒழுக்கமற்றவர்களா?

    ஒழுக்கமற்றவர்களா?

    ‘ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்து விட்டு வருபவர்கள் ஒழுக்கமானவர்களாக இருப்பார்கள். ஆனால், தனுஷ், வயிறுமுட்ட மது குடிப்பதும், சிகரெட் பிடிப்பதுமாக இருக்கிறார்' என்று பள்ளியின் மற்றொரு மாணவர் கூறியுள்ளார்.

    ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்

    ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்

    இந்த பள்ளியில் படித்த பல பேர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், ஆங்கில பேராசிரியர்களாவும் பணியில் உள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அனைவருமே ஆங்கிலம் சரளமாக பேசுகின்றனர். இந்த உண்மை தெரியாமல் தங்கள் பள்ளியை கேவலப்படுத்திவிட்டதாகவும் முன்னாள் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் மோடி, ரஜினி,

    பிரதமர் மோடி, ரஜினி,

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியின் மாணவர், பிரதமர் நரேந்திர மோடியும் ராஜ்கோட்டில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் இரு வருடங்கள் பணியாற்றியுள்ளார் என்று பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

    விவேகானந்தர் உருவாக்கியது

    விவேகானந்தர் உருவாக்கியது

    சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்டு ஒழுக்கத்தை மட்டுமே போதிக்கும் ஒரு கல்வி நிறுவனத்தைப் பற்றி இப்படி தரக்குறைவாக சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறும் இவர்கள், வேறு ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தின் பெயரை கூறியிருக்கலாமே என்கின்றனர்.

    இயக்குநர் வேல்ராஜ் வருத்தம்

    இயக்குநர் வேல்ராஜ் வருத்தம்

    இது குறித்து கருத்து கூறியுள்ள இயக்குநர் வேல்ராஜ், யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இந்த வசனத்தை வைக்கவில்லை. தமிழ் மீடியத்தில் படித்தோம் என்கிற தாழ்வு மனப்பான்மையை உடைத்து அவர் எப்படி முன்னேறுகிறார் என்பதுதான் கதை. படத்தின் இரண்டாவது பாதியில் ஹீரோவை நேர்மையானவராகவும், வெற்றிபெறுபவராகவும்தான் காட்டியுள்ளோம். அது அந்த பள்ளியில் படித்த காரணத்தினால்தான் சாத்தியமாகிறது என்ற வேல்ராஜ், இந்த வசனம் யாருடைய மனதையாவது புண் படுத்தியிருந்தால் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    மீண்டும் சர்ச்சை

    மீண்டும் சர்ச்சை

    ஏற்கனவே இப்படத்தில் தனுஷ் சிகரெட் பிடித்த காட்சி போஸ்டர்களில் அச்சிட்டு ஓட்டப்பட்டதற்கு புகையிலை ஒழிப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்தது. இப்போது மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

    English summary
    Velai Illa Pattathari has been running successfully at the theatres, thanks to Dhanush’s stellar performance. However, the film is now caught in a legal trouble because of a dialogue in the film, which has earned the wrath of the alumni of Ramakrishna Mission school and they have filed a defamation case against the director of the film.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X