100 நாட்களை கடந்த தனுஷின் வேலையில்லா பட்டதாரி

By Mayura Akilan

தனுஷ், அமலாபால் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் நூறாவது நாளை கடந்துள்ளது. இன்றைய அவசர சினிமா யுகத்தில் ஒரு படம் மூன்று நாட்கள் ஹவுஸ்புல் ஆக ஓடினாலே வெற்றி விழா கொண்டாடுகின்றனர்.

ஒரு சில படங்கள் மட்டுமே நூறாவது நாள் என போஸ்டரில் ஒட்டப்படுகிறது. தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படமும் நூறாவது நாள் வரிசையில் இணைந்துள்ளது.

ஒளிப்பதிவாளராக இருந்த வேல்ராஜ், ''வேலையில்லா பட்டதாரி'' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தனுஷ், அமலாபால், சுரபி, சரண்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

வெளியான நாள் முதலே இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் வாரி குவித்தது.

தனுஷ் வெற்றிப்படம்

தனுஷ் வெற்றிப்படம்

தனுஷூக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படம் ஹிட் படமாக அமைந்தது. இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி படம் இன்றோடு 100வது நாளை எட்டியிருக்கிறது.

லோ பட்ஜெட் ஹை வசூல்

லோ பட்ஜெட் ஹை வசூல்

வேலையில்லா பட்டதாரி திரைப்படம் தனுஷின் 25 வது படமாகும். தனுஷ் தனது சொந்த நிறுவனத்தில் இந்த படத்தை தயாரித்தார். 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூலானது.

அமலாபாலின் திருமண பரிசு

அமலாபாலின் திருமண பரிசு

நடிகை அமலாபால் இயக்குநர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்ட பின்னர் ரிலீசான முதல் படம் சூப்பர்ஹிட் படமானது.

மகிழ்ச்சியில் இயக்குநர்

மகிழ்ச்சியில் இயக்குநர்

இதுகுறித்து படத்தின் இயக்குநரான வேல்ராஜ் கூறுகையில், இப்படத்தை நான் இயக்க காரணமே முழுக்க முழுக்க தனுஷ் தான். அவரால் தான் நான் இயக்குநரானேன். இப்படம் 100வது நாளை எட்டியிருப்பது சந்தோஷம். இதற்காக தனுஷூக்கும், ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

அதிகமாக உழைப்பேன்

அதிகமாக உழைப்பேன்

தற்போது நான் கொம்பன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறேன். வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தனுஷூடன் ஒரு படத்தில் இணைய இருக்கிறேன். அவருடன் இணைவது சந்தோஷம். வேலையில்லா பட்டதாரி படத்தை காட்டிலும் இந்தப்படத்திற்கு இன்னும் அதிகமாக உழைக்க காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் வேல்ராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X