Dhanush New Movie: தனுஷின் புதிய பட அறிவிப்பு இன்று வெளியாகிறது - தயாரிப்பாளரா இல்லை ஹீரோவா?
சென்னை: Dhanush New Movie (தனுஷின் புதிய படம்) தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸின் புதிய அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஹீரோ யாராக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
தனுஷ் கடைசியாக வாத்தி படத்தில் நடித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதுமட்டுமின்றி இந்தப் படம் தமிழ் படமா இல்லை தெலுங்கு படமா என்ற குழப்பம்தான் படம் நெடுக எழுந்ததாகவும், பைலிங்குவலில் நடிக்கிறேன் என்ற பெயரில் இவ்வளவு தூரம் ப்ளாப் கொடுத்திருக்க வேண்டிய அவசியமில்லை என ரசிகர்கள் வெளிப்படையாக கூறினர்.

கேப்டன் மில்லரில் நடிக்கும் தனுஷ்: கடந்த சில வருடங்களாக வெற்றிப்படத்துக்கு திணறிக்கொண்டிருந்த தனுஷுக்கு திருச்சிற்றம்பலம் படம் கம்பேக்காக அமைந்தது. எனவே அந்த வெற்றியை அப்படியே தொடர்வார் என நினைத்திருந்த தனுஷ் ரசிகர்களுக்கு வாத்தி படம் ஏமாற்றத்தை கொடுத்தது. வாத்தி படத்துக்கு அடுத்ததாக அவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார். சாணிக்காயிதம், ராக்கி ஆகிய படங்களின் இயக்குநர் என்பதால் கேப்டன் மில்லர் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் தனுஷ் ரசிகர்கள்.
எப்படி இருக்கும் கேப்டன் மில்லர்?: தியாகராஜ குமாரராஜவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பதாலும், சாணிக்காயிதம், ராக்கி ஆகிய படங்களை வித்தியாசமாக கொடுத்திருக்கிறார். அதேசமயம் கேப்டன் மில்லர் பீரியட் பிலிமாக உருவாகிவருகிறது எனவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி. தியாகராஜன் தயாரிக்கிறார். படமானது தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஒருவேளை பீரியட் பிலிமாக இருக்கும்பட்சத்தில் தனுஷ் நடிக்கும் முதல் பீரியட் பிலிம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

150 கோடி ரூபாயில் கட்டிய பிரமாண்ட வீடு: இதற்கிடையே தனுஷ் போயஸ் கார்டனில் 150 கோடி ரூபாயில் பிரமாண்டமாக வீடு கட்டினார். அந்த வீட்டில் அவர் தனது தாய், தந்தையுடன் வசித்துவருகிறார். இதன் கிரஹப்பிரவேசம் சில மாதங்களுக்கு முன்னர்தான் நடந்து முடிந்தது. ரஜினிகாந்த்துக்கு போட்டியாகத்தான் அவர் வசிக்கும் பகுதியிலேயே இந்த பிரமாண்ட வீட்டினை அவர் கட்டியதாகவும் கிரஹப்பிரவேசத்தின்போது தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தனுஷின் புதிய பட அறிவிப்பு இன்று வெளியாகிறது: இந்நிலையில் தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 7.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனையடுத்து இந்தப் புதிய படத்தில் யார் ஹீரொவாக நடிக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
படத்தின் ஹீரோ விஷ்ணு விஷாலா?: இப்படத்தில் தனுஷ் நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என கருதப்படுகிறது. அதேசமயம் நடிகர் விஷ்ணு விஷாலை இப்படத்தில் ஹீரோவாக கமிட் செய்திருக்கிறார் தனுஷ் எனவும் ஒரு தகவல் உலாவிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே இந்தப் படத்தில் நடிப்பதற்காகத்தான் லால் சலாம் படத்திலிருந்து விஷ்ணு விலகினார் என ஒரு வதந்தி பரவியதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











