‘ஹே கோலி சோடாவே‘பாடல்… 5 மில்லியன் லைக்குகளை பெற்று புதிய சாதனை !

சென்னை : மாரி 2 திரைப்படத்தில் இடம் பெற்ற ரௌடி பேபி பாடல் மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது.

யூடியூபில் அதிக லைக்குகளை பெற்ற தென்னிந்தியப் பாடல் என்ற சாதனையை பெற்றுள்ளது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த தனுஷின் ரசிகர்கள் இந்த பாடலை ஹேஷ்டேக் மூலம் டிரெண்டாக்கி வருகின்றனர்

வெற்றி பெற்றது

வெற்றி பெற்றது

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான மாரி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்த பாலாஜி மோகன் இயக்கத்தில் 2018 மாரி 2 திரைப்படம் வெளியானது. இதில் தனுஷூக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். மேலும், வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

துள்ளல் நடனம்

துள்ளல் நடனம்

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை இருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ரௌடி பேபி பாடல் அனைவரையும் ஆட்டம் போடவைத்த பாடலாக உள்ளது. இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். தனுஷின் பாடல் வரியில் தீ மற்றும் தனுஷ் இப்பாடலை பாடி இருந்தனர். சாய் பல்லவி, தனுஷின் துள்ளல் நடனம் , செட் என அனைத்தும் இந்தப்பாடலை மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றியது.

5 மில்லியன் லைக்குகள்

5 மில்லியன் லைக்குகள்

யூடியூப்பில் வெளியான இந்த பாடல் பல சாதனைகளை படைத்த வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளது. ரவுடி பேபி வீடியோ பாடல் யூடியூபில் 5 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. தென்னிந்தியாவில் அதிக அளவில் லைக்குகளை பெற்ற பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த பாடலை இதுவரை 118 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இரண்டு தெலுங்கு படங்களில்

இரண்டு தெலுங்கு படங்களில்

தனுஷ் 43 என்ற திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார். தனுஷ் 44 திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாக உள்ளது. மேலும் இரண்டு நேரடி தெலுங்கு திரைப்படத்திலும் தனுஷ் கமிட்டாகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X