‘வட சென்னை’யில் நானும் சிம்புவும் நடிக்க வேண்டியது.. நான் நோ சொல்லிட்டேன்.. தனுஷ் சொன்ன சீக்ரெட்!
சென்னை: வடசென்னை படத்தில் சிம்புவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று வெற்றிமாறன் என்னிடம் கேட்டார். ஆனால் முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று பேட்டி ஒன்றில் தனுஷ் கூறியுள்ளார். அதன் பிறகு தான் தனுஷ், இயக்குநர் அமீரை சந்தித்து அவரை வற்புறுத்தி அந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்.
பொல்லாதவன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன், தனது இரண்டாவது படத்திலும் தனுஷை ஹீரோவாக வைத்துஆடுகளம் படத்தை இயக்கினார். சேவல் சண்டை கதைக்களமாக கொண்ட அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று தேசிய விருதை வென்றது. இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணிக்கு என்று ரசிகர் கூட்டமும், எதிர்பார்ப்பும் பன்மடங்கு அதிகரித்தது.

இயக்குநர் வெற்றி மாறனின் வடசென்னை: ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து விசாரணை படத்தை இயக்கிய வெற்றிமாறன், மீண்டும் தனுஷுடன் இணைந்து வட சென்னை படத்தை இயக்கினார். வடசென்னையை மையமாக வைத்து பல படங்கள் வந்தாலும், இந்த படம் அப்பகுதி மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படமாகவும், அவர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் படமாகவும் இருந்தது. வடசென்னை வெற்றிப்படமாக அமைந்த போதும், அந்த படத்தில் இடம் பெற்ற கெட்ட வார்த்தைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இப்போதும் வெற்றிமாறனின் தீவிர ரசிகர்கள் வடசென்னை 2 திரைப்படம் எப்போது வரும் என்று எதிர்பார்த்துள்ளனர்.
என்னிடம் பெருந்தன்மை இல்ல: இந்நிலையில், தனுஷ் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், வெற்றிமாறன் என்னிடம் வடசென்னை படத்தின் கதையை என்னிடம் சொன்ன போது எனக்கு பிடித்துவிட்டது. அப்போது அவர், அன்பு கதாபாத்திரத்தில் சிம்புவையும், ராஜன் கதாபாத்திரத்தில் என்னை நடிக்கும்படி கேட்டார். ஆனால், நான், அந்த அளவிற்கு என்னிடம் பெருந்தன்மை இல்லை, நான் பண்ணவில்லை என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு தான் ராஜன் கதாபாத்திரத்தில் அமீர் நடித்தார் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
தனுஷ் வற்புறுத்தினார்: அதே போல, சமீபத்தில் வடசென்னை படத்தில் நடித்தது குறித்து பேசிய அமீர், வடசென்னை படத்தில் நடிக்குமாறு, தனுஷ் எனக்கு கால் செய்து வற்புறுத்தி கேட்டார். நான் முதலில் முடியாது, கதை மேல் நம்பிக்கை இல்லை என்று கூறினேன். ஆனால், தனுஷ் , அண்ணா நீங்க எனக்காக இந்த படத்தில் நடித்து கொடுங்கள் என்று வ்ற்புறுத்தி கேட்டார். தனுஷ் அவ்வளவு தூரம் கூறிய காரணத்தால் தான் நான் அந்த படத்தில் நடித்தேன். ஆனால், வடசென்னை படத்திற்கு பிறகு 40 கதை என்னை தேடி வந்தது என இயக்குனர் அமீர் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











