கதையை கேட்காமலேயே பிரபல இயக்குநருக்கு ஓகே சொன்ன தனுஷ்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: நடிகர் தனுஷ் கதையை கேட்காமலேயே பிரபல இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவில் நாள்தோறும் பல்வேறு சுவாரசிய சம்பவங்களும், பல்வேறு படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது.

படத்தின் பூஜை, பாடல்கள் வெளியீடு, டீஸர், ட்ரெயிலர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. அவற்றில் சுவாரசியமான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

கதையை கூட கேட்கவில்லை

கதையை கூட கேட்கவில்லை


அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் நடிகர் தனுஷ் அடுத்து நடிக்கும் படம் குறித்த தகவல்களை கூறியுள்ளார் பிகே. அதவாது நடிகர் தனுஷ் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குகிறார். சுந்தர் சி இயக்குவதால் இப்படத்தின் கதையை கூட கேட்கவில்லையாம் நடிகர் தனுஷ்.

நயன்தாரா படத்தில் கவின்

நயன்தாரா படத்தில் கவின்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்கள் முலம் பிரபலமானவர் நடிகர் கவின். பிக்பாஸ் சீசன் 3 கழ்ச்சியிலும் பங்கேற்றார். இதன் மூலம் பிரபலமான நடிகர் கவினுக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது. சமீபத்தில் அவரது நடிப்பில் லிஃப்ட் படம் வெளியானது. அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் கவின்.

அம்மாவே அம்மா கேரக்டரில்

அம்மாவே அம்மா கேரக்டரில்

இதேபோல் நடிகர் பிருத்திவி ராஜ் அடுத்து நடிக்கும் படம் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. அதன்படி தமிழில் நேரம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் இயக்கத்தில் கோல்டு என்ற படத்தில் நடிக்கிறார் பிருத்திவி ராஜ். இந்தப் படத்தில் பிருத்திவி ராஜுக்கு அம்மாவாக அவரது அம்மா மல்லிகா இந்தப் படத்தில் நடிக்கவுள்ளாராம்.

அரபு மொழி பாடல்

அரபு மொழி பாடல்


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பீஸ்ட். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் அரபு மொழியில் பாடல் ஒன்றை அனிருத் கம்போஸ் செய்வதாக கூறியுள்ளார் பிகே.

வில்லன் யார் தெரியுமா?

வில்லன் யார் தெரியுமா?

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடிக்கிறார் விஜய். தளபதி 66 என குறிப்பிடப்படும் இப்படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகர் நானி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X