தலையில் தொப்பி..சால்வை அணிந்து..தர்பாரை ரசித்த தனுஷ்

சென்னை: நெல்லையில் உள்ள திரையரங்கில் தலையில் தொப்பி அணிந்து, சால்வை போர்த்தி தர்பார் படத்தை பார்த்து ரசித்தார் தனுஷ்.

நடிகர் தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைப்பெற்று வருவதாக தெரிகிறது. ஜனவரி 9ந் தேதி தர்பார் வெளியீட்டை ஒட்டி நெல்லையில் உள்ள முத்துராம் சினிமாஸ் திரையரங்கில் தனுஷ் இரவுக்காட்சியை பார்த்தார்.

Dhanush saw the movie Darbar in the theater

தர்பார் படத்திற்கு செல்லும் போது திரையரங்கின் உரிமையாளரை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சமயத்தில் எடுக்கபட்ட புகைப்படங்களை ராம் முத்துராம் சினிமாஸ் திரையரங்கின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளனர். இதில் திரையரங்கிற்கு தனுஷ் தொப்பி அணிந்து சால்வை போத்திய படி வந்திருந்தார் .

தனுஷின் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் தனுஷ் மட்டுமில்லை பல நடிகர்களும் இவ்வாறே திரையரங்கிற்கு வருவார்கள். ரசிகர்களோடு ரசிகர்களாக படம் பார்ப்பது ஒரு பெரும் மகிழ்ச்சியைத் தரும், ஆனால் ரசிகர்கள் தொல்லை கொடுத்து விட கூடாது என்பதற்காக சட்டென்று வந்து சென்று விடுவார்கள் .

தனுஷ் நடிப்பில் கடைசியாக என்னை நோக்கி பாயும் தோட்டா படம் பெயர் சொல்லும்படி இல்லை. அதற்கு முன் வெளிவந்த அசுரன் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதற்கு பிறகு தனுஷ் முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் படங்களை இயக்கிய ராம்குமார் படத்தில் நடிக்க உள்ளார் .

Dhanush saw the movie Darbar in the theater

கர்ணன் படத்தில் தனுஷ் ,லால்,யோகிபாபு ,ராஜிஸ்யா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சில நாட்களுக்கு முன் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது .

Dhanush saw the movie Darbar in the theater

தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் தாணு, கர்ணன் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்து உள்ளனர். இதற்கு முன் வேலையில்லா பட்டதாரி 2 மற்றும் அசுரன் படங்களுக்காக இணைந்தனர். அதில் அசுரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து தற்போது கர்ணன் படத்தில் இணைந்து இருக்கின்றனர். அதுவும் பரியேறும் பெருமாள் இயக்குனருடன் இணைந்துள்ள இந்த கூட்டணி பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X