Dhanush: மூன்று மொழிகளில் உருவாகும் தனுஷ் -சேகர் கம்மூலா படம்.. படத்துல நாகார்ஜுனா இருக்காரா!

சென்னை: நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய டி50 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார் தனுஷ். இந்தப் படத்தை அவர் இயக்கி நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சேகர் கம்மூலா இயக்கத்தில் தனுஷ் இணையவுள்ளார். சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது.

Dhanush -Sekhar Kammula project to be planning as Trilingual biggie

தனுஷ் -சேகர் கம்மூலா படத்தில் இணையும் நாகார்ஜூனா: நடிகர் தனுஷ் -அருண் மாதேஸ்வரன் இணைந்துள்ள படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. படம் தீபாவளி ரிலீசாக வெளியாகும் என்று முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், படம் டிசம்பர் வெளியீடாக ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதத்தில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் நாளைய தினம் தனுஷ் பிறந்தநாளையொட்டி படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுதந்திர காலகட்டத்திற்கு முந்தைய கதைக்களத்தை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், டீசரும் மிகவும் சிறப்பாக அதிரடியாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துக் கொடுத்துள்ள தனுஷ், அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகவுள்ள டி50 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் தனுஷ் நடிக்கவுள்ளார். படத்தில் அபர்ணா முரளி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்குப்பட இயக்குநர் சேகர் கம்மூலா படத்திலும் தனுஷ் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், அடுத்தடுத்து கேப்டன் மில்லர், டி50 படங்களில் பிசியாகியுள்ளார் தனுஷ். இதனிடையே டி50 படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் தனுஷ் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திலும் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக டி50, தேரே இஷ்க் மெய்ன் மற்றும் மாரி செல்வராஜ் படங்களிலும் ஏஆர் ரஹ்மானே இசையமைக்கவுள்ளதாக கமிட்டாகியுள்ளார்.

Dhanush -Sekhar Kammula project to be planning as Trilingual biggie

அடுத்தடுத்த தனுஷ் படங்களில் ஏஆர் ரஹ்மான் கமிட்டாகி வருவது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனிடையே தனுஷ் -சேகர் கம்மூலா இணையும் படம் மிகவும் பிரம்மாண்டமாக மூன்று மொழிகளில் உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. த்ரில்லர் படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தில் நாகர்ஜூனா முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் படத்தில் சாய் பல்லவியும் ராஷ்மிகா மந்தனாவும் நாயகிகளாக நடிக்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களின் படங்களில் இணைந்து வருகிறார் தனுஷ். டி50 படத்தை தொடர்ந்து சேகர் கம்மூலா, மாரி செல்வராஜ், மற்றும் பாலிவுட்டில் ஒரு படம் என அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார். இந்தப் படங்களில் டி50க்கு பிறகு எந்தப் படத்தில் இணைவார் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X