வெறும் துண்டக் கட்டிக்கிட்டு.. கையில் வாளுடன்.. அசுரனை விட பயங்கரமான போஸில் ‘கர்ணன்’ தனுஷ்!

Recommended Video

Dhanush Karnan Shooting Spot | Mari Selvaraj | Djhanush 41

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கர்ணன்' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வைரலாக்கி உள்ளார்.

வெற்றிமாறனின் அசுரன் படத்தில் வெறித்தனம் ஏறிய வயதான ரோலில் நடிகர் தனுஷ் மிரட்டியிருந்தார்.

இந்நிலையில், கையில் வாளுடன் வெறும் துண்டை மட்டும் கட்டிக் கிட்டு பாறையின் மீது ஏறி நிற்கும் தனுஷின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை தனுஷ் வெளியிட்டுள்ள நிலையில், தனுஷ் ரசிகர்கள் அதனை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தனுஷ் ட்வீட்

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி பாராட்டுக்களை அள்ளிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தற்போது நடித்து வருகிறார். அந்த படத்திற்கு கர்ணன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் மெர்சலான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்து தனது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

இப்ப வந்து மோதுடா

தனுஷ் வெளியிட்ட கர்ணன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பார்த்த தனுஷ் ரசிகர்கள், #Karnan என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். தனுஷ் நடிப்பில் பொங்கல் அன்று வெளியான பட்டாஸ் படத்தின் புகைப்படத்தை பதிவிட்டு, "இப்ப வந்து மோதுடா.. கிட்ட வந்து பாருடா.. என இந்த ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார்.

விருது வேட்டை

தலைவா கர்ணன் போஸ் தீயாய் இருக்கிறது. கண்டிப்பான சிறப்பான சம்பவம் காத்துகிட்டு இருக்கு, இந்த வருஷமும் உங்களுக்கு விருது வேட்டை நிறைய இருக்கும் போல என இந்த தீவிர தனுஷ் ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார். மேலும், தனுஷின் இந்த வெறித்தனமான லுக்குக்கு லைக்குகள் குவிகிறது.

அசுரனை விட

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது என ஒரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பதிவிட்டு தனுஷ் போட்ட ட்வீட் டிரெண்டாகி வருகிறது. தனுஷின் இந்த ரசிகர், அசுரனுக்கு டஃப் கொடுக்கும் போல.. 2020ம் ஆண்டு சம்பவம் இருக்கு காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

ஷூட்டிங் ஸ்பாட்

திருநெல்வேலியில் அசுரன் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அசுரன் படத்தில் பாறைகள் மற்றும் மலைகளில் ஏறுவது போன்ற காட்சியில் தனுஷ் நடித்திருப்பார். இந்நிலையில், கர்ணன் படத்தில் பாறை மேல் கையில் வாளுடன் திரும்பி நிற்கும் போஸ் கொடுத்துள்ள தனுஷின் ஷூட்டிங் ஸ்பாட் மேக்கிங் புகைப்படத்தையும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதை தாண்டின சம்பவம்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் வெறியேறிய கொலைகாரனாக தனுஷ் மாறி எதிரிகளை வெட்டி வீழ்த்துவார். அதையும் தாண்டின சம்பவம் ஒன்று மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் இருக்கப் போவதாக தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து கமெண்ட்டுகளை தெறிக்கவிடுகின்றனர்.

150 கோடி

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான அசுரன் படம் 125 கோடி வசூலை ஈட்டியது. பொங்கலுக்கு வெளியான பட்டாஸ் படம் 75 கோடி வசூலை குவித்து இன்னும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படம் நிச்சயம் 150 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவிக்கும் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X