அனைத்தும் தொடங்கிய இடம்… காதல் கொண்டேன் நினைவை பகிர்ந்த தனுஷ் !
சென்னை : தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதல் கொண்டேன் திரைப்படத்தின் முதல் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் அதற்கு கேப்ஷனாக அனைத்தும் தொடங்கிய இடம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த கறுப்பு வெள்ளை புகைப்படம் அனைவரையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

அனைவரின் பாராட்டு
பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இதில், ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், லால், நட்டி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். எஸ் தாணு இப்படத்தை தயாரித்துள்ளார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
தனுஷ் தற்போது ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆண்டனி ரூசோ, ஜோ ரூவோ ஆகிய இருவரின் இயக்கத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ்,ஜெசிக்கா ஹென்விக் ஆகியோருடன் இந்து தனுஷ் இப்படத்தில் நடித்து வருகிறார்.
Recommended Video

குடும்பத்துடன்
இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.மேலும், கடந்த 3 மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருவதால் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தங்கியுள்ளார்.

அனைத்தும் தொடங்கிய இடம்
இந்நிலையில் தனுஷ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் காதல் கொண்டேன் திரைப்படத்தின் முதல் புகைப்படத்தை பதிவிட்டு, அனைத்தும் தொடங்கிய இடம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணாவால் படமாக்கப்பட்டு செல்வராகவன் இயக்கியது. வினோத், திவ்யா என்று கேப்ஷன் போட்டுள்ளார். இந்த கருப்பு வெள்ளை புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











