Dhanush: கஸ்தூரி ராஜாவோட வாரிசு.. க்யூட் புகைப்படம்.. தந்தையர் தினத்தில் தனுஷ் எமோஷனல் போஸ்ட்!

சென்னை: நடிகர் தனுஷ் தற்போது பான் இந்தியா ஸ்டாராக மட்டுமல்லாமல் உலக அரங்கில் கவனிக்கப்படும் ஸ்டாராகவும் உள்ளார். இவரது படங்கள் குறித்து பாலிவுட் சினிமா வட்டாரம் தொடங்கி ஹாலிவுட் வரை கவனித்து வருகிறது. இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் குபேரா. இந்த படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுவதால் தனது தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜாவுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து எமோஷனலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என தமிழ் சினிமாவில் தன்னை சகலகலா வல்லவானாக நிறுவிக் கொண்டு வருகிறார் தனுஷ். இவரது படங்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் உள்ளார்களோ அதே அளவுக்கு அவரது இயக்கத்திற்கும் உள்ளார்கள். இவர் எழுதும் பாடல்கள், அவர் பாடும் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரிய ஹிட் அடிக்கிறது.

Dhanush Shares His Childhood Photo With His Father Kasthuri Raja On Fathers Day
Photo Credit:

ஒரு படத்தில் கூடுமானவரை பல கிராஃப்ட்களில் தனுஷின் பங்களிப்பு இருந்துவிடுகிறது. இது தயாரிப்பாளர்களுக்கு ஒருவகையில் நிம்மதியையும் கொடுத்துவிடுகிறது. கடந்த ஆண்டு இவரது 50வது படம் வெளியானது. இந்த படத்தின் கதையை தனுஷ் எழுதி அவரே இயக்கவும் செய்திருந்தார். படம் வணிக ரீதியாக ரூபாய் 100 கோடிகள் வசூல் செய்தது. வெற்றிப் படங்களின் வரிசையிலும் சேர்ந்து கொண்டது. அதேபோல் இவரது இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

தனுஷும் குபேராவும்: இந்நிலையில் இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாக உள்ள படம் இட்லி கடை. இந்த படம் வரும் அக்டோபர் மாதல் வெளியாகவுள்ளது. அதற்கு முன்னர் இவரது நடிப்பில் வெளியாகவுள்ள படம் குபேரா. தெலுங்கு பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்துள்ளார். படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக படம் வெளியாக உள்ளது. மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகவுள்ளது. படம் வெளியாக இன்னும் மிகக் குறைந்த நாட்கள் மட்டுமே இருப்பதால் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இவருடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

Dhanush Shares His Childhood Photo With His Father Kasthuri Raja On Fathers Day
Photo Credit:

எமோஷனல் வாழ்த்து: இந்நிலையில் இன்று அதாவது ஜூன் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. பலரும் தங்களது தந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜாவுடன் தனது சிறு வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது, " இன்று நான் இவ்வளவு உயரத்தில் இருக்க பல தியாகங்களை செய்த உங்களைப் பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. எனது அப்பா என்னுடைய ஹீரோ. தந்தையர் தின வாழ்த்துகள் அப்பா" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு எமோஷனலாக இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X