அன்புதானே எல்லாமே.. லதா ரஜினிகாந்த் பாடிய பாடல்.. மருமகன் தனுஷ் போட்ட அடடே ட்வீட்!

சென்னை: கோச்சடையான் படத்திற்கு பிறகு மீண்டும் பாட்டு பாடி அசத்தி உள்ளார் சூப்பர்ஸ்டார் மனைவி லதா ரஜினிகாந்த்.

Recommended Video

Rajinikanth early morning walking in Kelampakkam

Peace for Children என்ற அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் லதா ரஜினிகாந்த்.

அவர் தற்போது எழுதி, பாடி, இசையமைத்துள்ள "அன்பு ஒன்றுதான்" என்ற பாடலை ஷேர் செய்த நடிகர் தனுஷ், தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

பாடகி லதா ரஜினிகாந்த்

பாடகி லதா ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் சிறந்த பாடகி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். உலகநாயகன் கமல்ஹாசனின் டிக் டிக் டிக் படத்தில் இடம்பெற்ற "நேற்று இந்த நேரம்", அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் இடம்பெற்றுள்ள "கடவுள் உள்ளமே", வள்ளி படத்தின் "டிங் டாங்", "குக்கூ கூவும்". மற்றும் கடைசியாக கோச்சடையான் படத்தில் ரஹ்மான் இசையில் இடம்பெற்ற "மணப்பெண்ணின் சத்தியம்" உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.

அன்பு ஒன்றுதான்

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, "அன்பு ஒன்றுதான்" என்ற பாடலை லதா ரஜினிகாந்த் பாடியுள்ளார். நேற்று வெளியாகி வைரலாகி வரும் இந்த பாடலை நடிகர்கள் தனஷ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர். இந்த பாடலை எழுதி, இசையமைத்து, பாடியும் உள்ளார் லதா ரஜினிகாந்த்.

அன்புதானே எல்லாமே

மாமியார் லதா ரஜினிகாந்த் பாடிய இந்த பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வரும் நடிகர் தனுஷ், "குழந்தைகளையே தனது உலகமாக மாற்றிக்கொண்ட தாய் உள்ளத்தில் இருந்து ஒரு பாடல், அற்புதம்! அன்புதானே எல்லாமே" என பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார். தனுஷ் ரசிகர்களும் அந்த பாடலை வைரலாக்கி வருகின்றனர்.

மனதை வருடும் பாடல்

மனதை வருடும் பாடல்

நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் என்பதற்கு எல்லாம் மேலாக, தான் ஒரு தீவிர ரஜினிகாந்த் ரசிகர் என்று மார்தட்டி சொல்லும் ராகவா லாரன்ஸ், தனுஷ் போட்ட ட்வீட்டை பார்த்து, பாடல் மனதை வருடுகிறது அம்மா.. குழந்தைகளுக்கான உங்கள் சேவை தொடர ராகவேந்திரா சாமியிடம் வேண்டிக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X