யுவன் சங்கர் ராஜா பர்த்டே பார்ட்டி.. அறிவு மற்றும் பாடகி தீ உடன் தனுஷ்.. வைரலாகும் புகைப்படம்!

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Recommended Video

Valimai Update | Yuvan Shankar Raja Interview | U1 Records | Tamil Filmibeat

யுவன் பிறந்தநாளை முன்னிட்டு பிரத்யேக இசை கச்சேரியும் நேற்று இரவு நடைபெற்றுள்ளது.

ஜெசிகாவின் இதயத்தில் பிரச்சினை.. நோய் தீர சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்

அதில் கலந்து கொண்ட தெருக்குரல் அறிவு மற்றும் பாடகி தீ உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனுஷ் ஷேர் செய்துள்ளார்.

யுவன் பர்த்டே

யுவன் பர்த்டே

மேஸ்ட்ரோ இளையராஜாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நள்ளிரவில்

நள்ளிரவில்

யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டுள்ளார். சந்தோஷ் நாராயணன், தெருக்குரல் அறிவு மற்றும் பாடகி தீ உள்ளிட்ட பல பிரபலங்கள் அந்த பிறந்தநாள் பார்ட்டி இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ரவுடி பேபி பாடிய தனுஷ்

யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு பாடகி தீ உடன் இணைந்து ரவுடி பேபி பாடலை பாடி அசத்திய வீடியோக்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

தனுஷ் கலக்கல்

தனுஷ் கலக்கல்

ஸ்டேஜில் வெறித்தனமாக ஆடிப் பாடி தனுஷ் ரசிகர்களை மகிழ்வித்த போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. துள்ளுவதோ இளமை படத்தில் இருந்தே தனுஷ் - யுவன் பயணம் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. ஏகப்பட்ட ஹிட் பாடல்களை இருவரும் இணைந்து தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளனர்.

என்ஜாமிகளுடன்

என்ஜாமிகளுடன்

நள்ளிரவு இசைக் கச்சேரியில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ் தெருக்குரல் அறிவு மற்றும் பாடகி தீ உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்து "என்ஜாமிகளுடன்.. எ பில்லியன் அண்ட் ஹாஃப் பிக்சர்" என கேப்ஷன் கொடுத்து வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

அது என்ன கணக்கு

அது என்ன கணக்கு

ரவுடி பேபி பாடல் 1.2 பில்லியன் வியூஸ்களை கடந்துள்ள நிலையில், என்ஜாய் எஞ்சாமி பாடல் 300 மில்லியனை கடந்து அரை பில்லியனை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தனுஷ் எ பில்லியன் அண்ட் ஹாஃப் பிக்சர் என கணக்கு போட்டே போட்டிருக்கிறார் என தனுஷ் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

எல்லாமே வைரல்

எல்லாமே வைரல்

இந்த கூட்டணி இணைந்தாலே அது உலகளவில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வைரல் ஆகி வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றே சொல்லலாம். சமீபத்தில் வெளியான என்ஜாய் எஞ்சாமி பாடல் சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்து வருகிறது.

யார் எடுத்த போட்டோ

யார் எடுத்த போட்டோ

தனுஷ், பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு இருக்கும் இந்த அட்டகாசமான புகைப்படத்தை யார் எடுத்தது தெரியுமா? வேறு யாரு நம்ம இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான். இந்த புகைப்படத்தை எடுத்தது நான் தானுங்க என அவரே ட்வீட் போட்டு அறிவிக்க ரசிகர்கள் கமெண்டுகளில் இந்த டீமையே வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X